வ
வகுத்தல்: வகுத்தல் என்பது பிரித்தல் என்று பொருள் படுவதால் ‘பகுத்தல்' என்னுஞ் சொல்லுடன் நெருங்கிய கேண்மையுடையது. வகுத்தலும் பகுத்தலும் வகு, பகு என்னும் அடிகளாற் பிறப்பன; இவ் அடிகள் இரண்டும் ஒன்றே என்று கருத இடம் உண்டு. பகர வகரங்கள் உதட்டில் பிறக்கும் ஓசைகள் ஆனமையின் ஒன்று மற்றொன்றாய்த் திரியும். வண்டி என்னுந் தமிழ்மொழி தெலுங்கில் பண்டி என்றும் ஆங்கிலத்தில் bandy என்றும் வருவது உணரத்தக்கது. பகர வகரங்களே அன்றி மகரமும் இதழிற் பிறக்குமாதலின் இம்மூன்றும் விரவி வருவ துண்டு. செம்மை, செவ்வை, செப்பம் முதலியவற்றையும் கும்பல், குப்பல், குவியல் என வருபவற்றையும் சேர்த்தறிய இது நன்கு புலப்படும். ஆதலால் பகு, வகு எனுமிவற்றுள் எது முந்தியது என்று ஐயமறக் கூற இயலாதேனும் அவை இரண்டும் ஒன்றே என்பது வெளிப்படை.
பகு என்னும் முதல் நிலையிலிருந்து பகிர், பகிர்தல் என்ற சொற்கள் தோன்றும் வண்ணம் வகு என்பதிலிருந்து வகிர், வகிர்தல் என்ற மொழிகள் பிறக்கும். வகிர் - பிளவு, வழி. வகிர்தல் பிளத்தல். அன்றியும் வகுதி என்றொரு சொல்லும் உண்டு.
-
-
இது, பகுதி என்பதைப்போல் ‘தி’ ஈறுபெற்றுவரும் ஒரு பெயர். பகுதி - பகுப்பு. வகுதி - வகுப்பு. தொகுதி. தகுதி மிகுதி என வருவனவும் இத்தகையவே. இனி பகுதி என்பது னி 'பா பாதி என்று நின்று அதற்குமேல் பாதித்தல் கூறுசெய்தல் என வருமாறு, வகுதி என்பது வாதி என நின்று அதன்மேல் வாதித் தல் என்றும் வரலாம். அங்ஙனம் ஆயின் வாதை என்பதும் மேற்கூறியவற்றுடன் ஒற்றுமையுடையதாகும். வகிர் என்ற சொல்லிற்கு 'வழி' என்ற பொருளும் வாதித்தல் என்பதற்குப் பேசுதல் என்ற பொருளும் பொருந்துமோ எனின் சொல்லுதும்.
அறு என்னும் முதனிலையின் பொருள் 'பிரி' என்பது. து ‘ஆறு' என்று நின்று ‘வழி' என்று பொருள்தரும். ஆறு அறுக்கப்பட்டது. அங்ஙனமே வகிர் - வகுக்கப்பட்டது. மேலும் அறு என்னும் அடியாக ‘அறை' என்ற மொழி பிறக்கும். இதற்குச் சொல் என்ற பொருளுண்டு. அறைந்தான் சொன்னான்.
-
-