உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

259

வி

விட்டுரைத்தல்: வெளிப்பட உரைத்தல்.

(திருக்கோ. 391.பேரா.)

விடு: விடு, அடு, இடு முதலிய பகுதிகள் சில இறந்த காலத்திலே விட்டு, அட்டு, இட்டு முதலியனவாய் வலி இரட்டி வரும். உடு, எடு, தடு முதலிய சில இரட்டா. அடு என்பது சமீபத்தல் பொருளிலே இரட்டாது அடுத்து அடுக்க, அடுத்த, அடுத்தான் முதலியனவாய் வரும். (செந்தமிழ். 11-43)

விடியல்: பழம்புலவர் பாட்டுக்களால் பொழுதுபுலர்ந்து கதிர்விரியும் இளவெயிற் காலையாய பகற்பொழுதின் முதற் பகுதியே விடியல் என்றும், இருள் புலருமுன்னுள்ள இரவின் இறுதிப்பகுதி நேரமே வைகறை என்றும், சுடர்படும் பகல் இறுதிக்காலமே எற்பாடு என்றும் மயக்கத்திற்கு இடனின்றித் தெளியக் கிடக்கின்றது.

(தொல்காப்பியர் பொருட்படலம். 24.)

விடையிலதிகாரி: விடையிலதிகாரி என்போர் கிராம சபைகளினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலை களைப் படித்துப் பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடை எழுதி அனுப்புவோர். அன்றியும், அரசனது ஆணைத் திருமுகத்தை ஊர்ச் சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணி மக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களே ஆவர்.

(முதற் குலோத்துங்க சோழன். 85.)

விண்டு: விண்டு என்பது பிளந்து என்பது போலச் செய் தவன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது.

விதி: விதியாவது செயப்படும் வினையினது நியதி.

விநாயகர்: வி+நாயகர்

=

(திருக்கோ. 24. பேரா.

(திருக்கோ. 7. பேரா.)

·

விநாயகர். தமக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள். (நல்ல தமிழ் எழுதவேண்டுமா? 137.)