உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

நிற்றல்.

இளங்குமரனார் தமிழ் வளம் 3

அடங்குதல் : மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே (திருக். 130. பரி.)

அடார் : கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக் கொடுத்து உள்ளால் உணவு வைப்ப அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுங் கல் வீழ்ந்து கொல்லும் பொறி. (நற்றிணை. 119. அ. நாராயண)

(2)

(யா.வி.1.)

அடி : (1) தளை அடுத்து நடத்தலின் அடியே. அடி என்பது, சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு. (தொல். பொருள். 313. பேரா.) தாள்; நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடி; தண்டு; கீரை வாழை முதலியவற்றின் அடி; கோல்; நெட்டி மிளகாய்ச் செடி முதலிய

(3)

வற்றின் அடி;

தூறு; குத்துச்செடி புதர் முதலியவற்றின் அடி; தட்டு; அல்லது தட்டை கம்பு சோளம் முதலிய வற்றின் அடி;

கழி; கரும்பின் அடி; கழை, மூங்கிலின் அடி; அடி; புளி வேம்பு முதலியவற்றின் அடி.

(சொல். கட். 65)

அடிமை : அடிமை என்னும் பண்புச் சொல் ஒருவனுக்குள் அடங்கி அவனுக்குத் தொண்டு செய்யும் தன்மையைக் குறிக் கின்றது. தொண்டு செய்யும் தன்மையில் இருந்து பின் உலக வழக்கில் தொண்டு செய்யும் ஆள் என்னும் பொருள்பட அது வந்தது. வேலையாள், தொண்டன், தொழும்பன், பணியாளன் என்பன ஒருபொருட் சொற்கள்.

(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2 : 128.)

அடை : அடை என்றால் இலை என்பது பொருள்.

·

இலைகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப்பட்ட அடை என்னும் சொல் வெற்றிலைக்குச் சிறப்புப் பெயராகவும் வழங்கப் பட்டது. அடை (வெற்றிலை) அருந்தும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வெறும் வெற்றிலையை மட்டும் உண்பது வழக்கம் இல்லை. வெற்றிலையாகிய அடையோடு கமுகின் காயாகிய பாக்கையும் சேர்த்து உண்பது வழக்க