உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ரு

சந்து - பொருத்து. தொடைப் பொருத்து (இடுப்பு) இரு பகைவர் பொருந்துதல். “இருவருக்குஞ் சந்து சொல்ல"

66

(சிலப். 8, 101, அடியார்.)

சந்து - சந்தை: பல கடைகள் கூடும் இடம்.

-

(வடமொழி வரலாறு. 70-71.) அம்பணம் : அம்பணம் மரக்கால். ஓர் அளவு கருவி. அம்பணத் தன்ன ஆமை என்பதால் பண்டைக் காலத்தே மரக்கால் யாமை போன்ற உருவமுடையதாயிருந்தது என்றுணர லாம். இதனைப் “பறைக் கட் பராரையர் அம்பண அளவையர்” எனவரும் சிலப்பதிகாரத்தினாலும் (14. 209-10) இதற்கு அரும்பத உரைகாரர், "பறைக்கட் பராரை அம்பணம் என்றது பட்ட மணிந்த வாயையும், பரிய அரையையும் உடைய அம்பண அளவை; ஆவது, அளக்கும் பறை முதலியன" என்று கூறும் விளக்கத்தானும் அடியார்க்கு நல்லார் "தரகர் அளக்கும் மரக்கால்" என்று உரை கூறுவதானும் அறிக.

(ஐங்குறு. 43. விளக்கம். பெருமழை.) அம்பலம் : அம்பலம் - பலரும் கூத்துக் காணும் இடம்; அரங்கம் - நாடகம் ஆடும் இடம். (சீவக. 2112.நச்.)

அம்பல் : (1) பரவாத களவு; என்னை? “அம்பலும் அலரும் : களவு இறையனார் அகப்பொருள். 22) என்றார் ஆகலின்.

(திருக்கோ. 180. பேரா.)

(2) ஒரு குமரியின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் எனவும், வெளிப் படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும்.

அம்பல் அலர் :(1) அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்,

அலர் என்பது சொல் நிகழ்தல்;

அம்பல் என்பது சொல் நிகழ்தல், அலர் என்பது இல் அறிதல்; அம்பல் என்பது இல் அறிதல், அலர் என்பது அயல் அறிதல்; அம்பல் என்பது அயல் அறிதல்,

(தமிழ்க்காதல். 71.)