30
இளங்குமரனார் தமிழ் வளம் - 3 3
அருள் : (1) தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள். (திருக். 757. பரி.)
(2) அருளாவது ஒன்றின் துயர்கண்டாற் காரணம் இன்றித் தோன்றும் இரக்கம்.
(புறம். 5. ப.உ.) (தொல். பொருள். 53. நச்.)
அருளுடைமை : (1) அருளுடைமையாவது யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரம் உடைமை.
(திருக். அருளுடைமை. மணக்)
(2) அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை.
(திருக். அருளுடைமை. பரி.) அருவி : அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர் தமிழறிஞர். ஆர்த்தல் ஒலித்தல் என்னும் பொருட்டு. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 3 : 310)
அரையம் : அரையம், இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்; முன்னாளில் அரை என்றே நின்று பின்பு புண ரியல் நிலையிடைப்பெற்ற அம்முச் சாரியையை இறுதி யாகக் கொண்டு வழங்குவதாயிற்று. "பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும் (தொல். 284) என்பது காண்க. இங்கே கூறிய ஆவிரை ஆவிரம் என நின்று ஆவாரம் என மருவிவிட்டது.
(ஐங்குறு. 325. ஒளவை சு.து.) அலக்கண் : அலக்கண் = கலங்கிய கண். துன்பத்துக்குக் காரணக் குறி - இலக்கணையால் வந்தது.
“அங்கு அலக்கண் தீர்த்து அவ்விடம் உண்டுகந்த அம்மானை
அலமரல்
தெருமரல் உழலுதல்
}
(சுந்தரர் தேவாரம்.)
(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2 : 78)
அலமரல்' 'தெருமரல்' 'உழலுதல்' என்னுஞ் சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும்.
(சொல். கட். 25.)