உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

33

(2) அழுக்காறு என்பதை அழுக்கு வழி என்று பொதுவாகப் பொருள் செய்யத் தோன்றும். ஆனால் ‘பேணாது அழுக்கறுப்பான்’ 'கொடுப்பது அழுக்கறுப்பான்’ ‘அழுக்கற்றகன்றாரும் இல்லை’ என்னும் தொடர்களால் அழுக்கறு என்னும் பகுதி கொண்டது இச் சொல்லமைப்பு என்று தெரிகிறது. 'அழுக்கு’ ‘அறு ச் என்னும் இரு பகுதிகள் சேர்ந்து இரண்டும் ஒரு சொல்லாகி அழுக்கறு' என வந்தது. ‘அழுக்கறு’ என்பதற்கு ‘அழுக்கடை எனவும், ‘அழுக்காறு' என்பதற்கு 'அழுக்கடைவு' எனவும் அழுக்காறாமை' என்பதற்கு 'அழுக்கடையாமை எனவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஆறுதல் என்னுஞ் சொல் பொருந்தல், தங்கல், அடைதல் என்னும் பொருளும் உடையது. 'அற்றதோர் கோதை' (சீவக. 226) என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையால் இதனை அறியலாம்.

அழுக்காறு என்பதற்கு அழுக்கு வழி என்று பொருள் கொண்டால் அழுக்காறாமை என்னும் எதிர்மறைக்கு ‘அழுக்கு வழிக் கொள்ளாமை' என்று பொருள் செய்ய நேர்ந்து ஒரு சொல்லியல்பிலும் தன் வினைச் சிறப்பிலும் உரை அமையாமற் போகும். அழுக்காறு என்பதற்கு அழுக்கடைவு என்று பொருள் கொண்டால் அழுக்காறாமை என்னும் எதிர்மறைக்கு அழுக் கடையாமை என்னும் நேர்ப் பொருள் கிடைக்கும்.

(திருக். அறம். 126-7.)

அழுகை : அழுகை என்பது அவலம்; அஃது இருவகைப் படும். தானே அவலித்தலும், பிறர் அவலங் கண்டு அவலித்தலும் என. இவற்றுள் ஒன்று (பிறர் அவலங்கண்டு அவலித்தல்) கருணை எனவும், ஒன்று (தானே அவலித்தல்) அவலம் எனவும் படும். (தொல். பொருள். 251. பேரா.) அழைப்பு : பொருள் புணரா ஓசை. (திருக்கோ. 102. பேரா.) அள்ளல் : அள்ளும் தன்மையதாகிய சேற்றின் குழம்பு. (நற்றிணை. 199. அ. நாராயண.)

அளபெடை : கோட்டு நூறும் (சுண்ணாம்பு) மஞ்சளும் கூடிய வழிப்பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவு படா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்து அல்லது புலப்படா, எள்ளாட்டிய வழி யல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல என உணர்க.

(தொல். எழுத்து. 6. நச்.)