உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர். கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை முதலியவற்றிற் செல்லும் அறிவு அவிந்து மனமொழி மெய்களால் அடங்கிய (சான்றோர் ) எனினும் அமையும். (புறம். 191. ப.உ) ஆனந்தக்குற்றம்: ஆனந்தம் என்னும் சொல் சாக்காடு என்னும் பொருட்டாம். ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு உறுவித்தற்கு ஏதுவாகிய குற்றம் என்பதாம்.

(சோமசுந்தரக் காஞ்சியாக்கம். 39.)