சொற்பொருள் நுண்மைவிளக்கம்
51
காட்டி வேறு வகைகளில் ஒருவனைக் கலங்கப் பண்ணவ தெல்லாம் இடுதேளிடுதல் எனவேபடும். (சொல். கட். 12.)
இடும்பை: இடும்பை என்ற சொல்லின் முதற் பகுதி இடுக்கண், இடுக்கம் ஆகிய சொற்களின் முற்பகுதியான ‘இடு என்பதே. இது தவிர்க்க முடியாத, தப்ப முடியாத கடுந் துன்பப் பொறியைக் குறிப்பதாகும். சொல்லின் பிற்பகுதியான ‘பை நஞ்சைக் குறிக்கும். தவிர்க்க முடியாத நச்சுத்துயர் என்பதே இதன் சொற்பொருள் ஆகும்.
(திருக்குறள். மணிவிளக்கவுரை. 1. 276 -177) இடியுண்டது: அடிக்கப்பட்டதனை அடியுண்டது என்றால் போல இடிக்கப்பட்டதனை இடியுண்டது என்றார். உண்டல் - உறுதல். (சிலம்பு 9. 22. அடியார்.)
இடைகழி: (1) தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் டைகழி. (சிலம்பு 10:27. அரும்பத... அடியார்.) (2) இடையிற் கழிந்து செல்லும் நடை. இடை கழி - ரேழி (கொச்சைத்திரிபு). (வடமொழி வரலாறு.89.)
இடைநாழி: அகநாழிகையாகிய கர்ப்பக் கிரகத்திற்கும் வாயிலுக்கும் இடையில் உள்ள இடம் இப்போது அர்த்த மண்டபம் என்று கூறப்படுகிறது. அர்த்த மண்டபத்துக்குத் தமிழ்ப் பெயர் இடைநாழி அல்லது இடை நாழிகை என்பது. இச்சொற்கள் சாசனங்களில் கூறப்படுகின்றன. இடை நாழிகை என்னும் சொல் துளுவமொழியிலும் வழங்கப்படுகிறது. துளுவ மொழியில் 'இடெநாளி' என்றும் 'எடெநாளி' என்றும் இச் சொல் வழங்கப்படுகிறது. (துளுமொழியும் தமிழும்.)
ம்
இடையர்: (1) நிலவளம் சிறந்தவை குறிஞ்சியும் முல்லையும் மருதமுமேயாகும். நெய்தல் நீர்வளத்தாற் சிறந்தது. இம் மூன்றனுள் முல்லை ஏனை இரண்டற்கும் இடை நிற்றலின் முல்லை நிலத்து ஆயரை இடையர் என்பர்.
(ஐங்குறு. முல்லை. ஔவை. சு.து)
(2) தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் டைப்பட்டது முல்லை நிலம். அந்நிலத்தில் பசும் புல்வெளிகள் உண்டு. அங்கு ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு பால் தயிர் முதலியவற்றை விற்பனை செய்து வாழ்ந்து வந்த மக்கள் முல்லை