சொற்பொருள் நுண்மைவிளக்கம்
53
டாவதான பிறிதோர் உயிரின் துன்பங் கண்டவழி உயிரி னிடத்துத் தோன்றும் நெகிழ்ந்த ஈரம், இரக்கம் எனப் படும். (திருக்குறள் அறம். 68.)
உடையன
இரட்டைக்கிளவி: இரட்டை இரட் க்கிளவி என்றது மக்கள் இரட்டை விலங்கு இரட்டை போல வேற்றுமை உ வற்றை அன்றி இலை இரட்டையும், பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை.
(தொல். சொல். 48. சேனா.)
இரத்தல்: ஈ என்று இரத்தல், இழிந்தோன் செயல்; தா என்று கேட்டல், ஒத்தோன் செயல்; கொடு என்று கட்டளை இடுதல், உயர்ந்தோன் செயல். (சொல். கட், 55.)
இரலை-கலை:
இரலைஇன மான்களின் கொம்புகள் உள் துளை அற்றவை. துளையற்று உள்ளே கெட்டியாக இருக்கும். மற்றும் இரலைஇன மான்களின் கொம்பு கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைப்பதில்லை. கலைமானினத்தின் கொம்புகள் உள்துளையுடையவை. கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இரலை இன மான்களின் கொம்பில் கிளைகள் இல்லை. கலைமானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. இந்த அடிப்படை வேற்றுமையைக் கொண்டு மான் வகைகளை இரலை இனமா கலையினமா என்று எளிதில் பிரித்துவிடலாம்.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 85.)
இரவச்சம்: அஃதாவது ஒருவர் வறுமையுற்ற காலத்து அவ்வறுமைதானே அவரைத் தள்ளிக்கொண்டு போய் இரப் பிக்கும்பொழுது, தமது ஒளி அடங்கிப் பொலிவழிந்து, கடுக வுரை கூடாது நின்று, தம் வறுமையை ஒருவற்குப் பல காலும் மதுரமாகச் சொல்லில் அது அவர் செவியில் ஏறாது சொல்லிய வரை எளியராக நினைந்து, கடைக்கணித்துப் பார்க்கும் பார்வையையும், கொடுப்பார் போலிருந்து பின்பு அவர் இல்லை என்றுவிட மனந்தடுமாறிச் செயலற்றுப்போம் போக்கையும் கண்டு அவ்விரப்பினை அஞ்சுதலாம். (நாலடி இரவச்சம். தருமர்.)
வ
இருகரையன்: ஆற்றின் நடுவில் இருந்து கொண்டு அதன் இரு கரைகளில் எதனை அடைவது என்று துணியாது இடர்ப் படுவனைப்போல ஒரு காரியத்தைச் செய்வதா தவிர்வதா என இருமனமாயிருப்பவனுக்கு இருகரையன் என்று பெயர்.
(சொல். கட். 12.)