உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

உகிர்நுதி: உகிர்நுதி - விரல். உகிரை நுதியிலே உடையது என்னும் காரணம் பற்றியது. (குறுந். 16. சௌரி.) உட்கொள்ளும் வகைகள்: அசைத்தல் - விலங்குபோல் அசையிட்டுத் தின்னுதல் - அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்; அரித்தல் - பூச்சி புழுப் போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்ததுதல் சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்; ஆர்தல் - வயிறு நிரம்ப உண்ணுதல்; உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்; உதப்புதல் - (குதப்புதல்) வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சுவைத் தல்; உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்; ஒதுக்குதல் ஒரு கன்னத்தில் அடக்குதல்; கடித்தல் கடின மானதைப் பல்லால் உடைத்தல்; கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்; கறித்தல் - மெல்லக் கடித்தல்; குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல். குதட்டுதல் - கால்நடை போல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்; கொறித்தல், ஒவ்வொரு கூல மணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்: சப்புதல் . சுவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல் சவைத்தல் வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்; சாப்பிடு தல் - சோறுண்ணல்; சுவைத்தல் ஒன்றன் சுவையை நுகர்தல்;

-

-

-

-

-

-

-

சூப்புதல். கடினமானதைச் சப்புதல்; தின்னுதல் மென்று உட்கொள்ளுதல்; நக்குதல் - நாவினால் தொடுதல்; பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக்குடித்தல்; மாந்துதல் ஒரே விடுக்கில் அல்லது பெரு மடக்காய்க் குடித்தல்; முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறை ஒன்றையிட்டுத் தின்னுதல்; மெல்லுதல் - பல்லால் அரைத்தல்; மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னுதல் ; விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்; மிசைதல் -மிச்சில் உண்ணுதல்.

(சொல். கட். 54)