உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

எரிக்கும் சினம் :

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வெகுளியும் இன்னாச்சொல்லும் தீயைப் போன்றன. தீ., பஞ்சிலோ குச்சியிலோ பற்றுகிறது. முதற்கண் தான் பற்றியதை எரிக்கும்; பின்னர்ச் சுற்றியுள்ளவற்றை எரிக்கும்; அதுபோலவே வெகுளியும் சரி, அதன் விளைவாம் இன்னாச்சொல்லும் சரி கொண்டவனை முதற்கண் அழிக்கும். பின்னர் அடுத்தும் தொடுக்கும் இருப்பவரை அழிக்கும். எவ்வுயிர்க்கும் இன்பமே கருதும் அறவோர் உள்ளத்தில் சுட்டெரிக்கும் இத்தீக்கு இடம் இருக்கவே முடியாது.

கு

பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ்சொல் என்னும் நான்கு பேய்மையும் ஒட்டாத அறவோர் உள்ளத்தே அறக்கடவுள் கோவில் கொள்வான்; அத்தகைய ' 'அறவாழி அந்தண'னுக்கு அறவோர் ஆற்றும் வழிபாடு யாது? அமைதிப் பணியாகத் தானே இருக்கமுடியும்!

அறவோர் உள்ளம் :

பளிங்கு போன்ற நீரில் தூசியும் தும்பும் இல்லை; சேறும் செதும்பும் இல்லை; நாற்றமும் நெடியும் இல்லை; பாசியும் வழுக்கலும் இல்லை. அத்தகைய தூய பளிங்கு நீர் போன்றதே அறவோர் உள்ளமும். அவர்கள் மனத்தில் மாசு இல்லை; சொல்லில் கொடுமை இல்லை; செயலில் தீமை இல்லை. உயிர்கள் எல்லாம் அமைதியாக வாழவேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அந்நோக்கம் நிறைவேறுவதற்காக அரும்பாடுகள் படவும், அல்லல் களை அணைக்கவும், ஆருயிர் இழக்கவும் அவர்கள் தவறியதே இல்லை.

தூய துறவு :

அறவோர் வாழ்வியல் துறைகள் பலப்பல. அவற்றுள் துறவு நிலை தலையாயது. நாடு நகர். உற்றார் உறவு நீத்துக் காடு தேடும் ஒன்றோ துறவு? தன்னலத்தைத் துறப்பதே துறவு. தன்னலத்தில் எல்லாம் தன்னலமானது தன்னுயிர் வாழ்வு பற்றியது. அதனையும் துறக்கத் துணிந்தவர் எவரோ, அதனையும் பொதுநலங் கருதித் துறக்கத் துணிந்தவர் எவரோ அவரே துறவி. அவரே அறவோர்.

1. குறள் : 8.

1. குறள் : 261.