உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

பிச்சை வேண்டா :

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஓர் இல்லறத்தான் புத்தரைத் திட்டினான்; நன்றாக அடிக்கவும் செய்தான். அவ்வேளையில் புத்தர் 'அன்ப! ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு வீட்டுக்காரன் உணவு படைக்கிறான். அந்த உணவைப் பிச்சைக்காரன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். அப்பொழுது அந்த உணவு எவரைச் சேரும்?" என்று வினாவினார். அவ் வில்லறத்தான், "பிச்சை வீட்டுக்காரனையே சேரும்" என்றான். 'அவ்வாறானால் உன் வசையையும், வெறுப்பையும் நான் ஏற்றுக் கொள்ள மறுத்தால் அது உன்னையே வந்து சேரும் அல்லவா! ஆனால் நானே அரிய நண்பன் ஒருவனை இழந்து வறியவனாகப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்" என்றார்.

1"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை'

"

என்பதை மெய்யாக்கினார் புத்தர். காலடியில் கல் :

புத்தர் ஒரு மலைப் பள்ளத்தாக்கில் நடந்து சென்றார். மலைமேல் இருந்து தேவதத்தன் ஒரு கல்லை உருட்டித் தள்ளினான். தலைக்கு வைத்த குறி காலில் பட்டு ஒரு விரலில் புண் உண்டாக்கியது. க் கீழ்மைச் செயலைச் செய்த பின்னரும் நாணமின்றித் தேவதத்தன் புத்தர் முன்னர் வந்தான். அப்பொழுது, “என் உயிர் உன்கையில் ல்லை என்பதை நீ உணரவில்லை. இப்பொழுதாவது உண்மையை உணர்ந்து கொள்வாயாக" என்று கூறிப் புன்முறுவலுடன் சென்றார்.தீமையை வெறுத்தாலும், தீமை செய்தவனை வெறுக்காத திருவுள்ளம் படைத்தவர் புத்தர் என்பதற்கு வேறு சான்று வேண்டுமா? அமைதிப்போர் ஆற்றல்:

அங்குலி மாலன் என்பவன் மிக்க கொடியவன். கண்டவர் களின் கைவிரல்களையெல்லாம் வெட்டி மாலையாகத் தொடுத்துக் கழுத்தில் அணிந்து கொள்ளும் அளவுக்குக் கொடியவன் அவன். அத்தகையவனைக் கொன் றொழிக்க வேண்டும் என்று எண்ணிய கோசலை மன்னன் வீரர்கள் பலரை அனுப்பி வைத்தான். இதனை அறிந்தார் புத்தர் பெருமான். அக் கொடியவன் மேலும் அருள்

1. திருக்குறள் :151.