உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சுந்தன் சோறு :

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

குசிநகர் என்னும் இடத்தில் தம் எண்பத்தோராம் வயதில் புத்தர் இயற்கை எய்தினார். இறுதியாக அவர் உண்டது சுந்தன் என்பவன் அளித்த உணவாகும். அவன் அளித்த உணவால் தமக்கு இறுதி எய்தியதாக அவன் வருந்தக் கூடாது என்னும் அருள் உணர்வு புத்தருக்கு அரும்பியது. ஆகவே, தம் முதன் மாணவர் ஆனந்தரிடம், “சுந்தன் அளித்த உணவுதான் எனக்கு இறுதியைத் தந்தது என்னும் வீண்பழி ஏற்பட்டு விடக்கூடாது. அவன் மிகவும் தூயன்; அவன் உள்ளம் அமைதி அடைவதாக! என்று நான் கூறியதாகக் கூற வேண்டும்" என்று வேண்டினார்.

கண்மூடுமுன் காண்க:

இறக்கும்போது அவர் காட்டிய ஒரு பெருந்தகைமை குறித்தற்குரியது."ஆனந்த! யான் இன்றிரவிலே இயற்கை எய்துவேன். அதைக் கேட்டறிந்த இவ்வூர் மக்கள் 'நாம் புத்தரை உயிரோடு காண முடியவில்லையே' என்று வருந்தக் கூடும். அதற்கு இடம் ஏற்படாவண்ணம் இப்பொழுதே அனைவருக்கும் அறிவிப்புச் செய்துவிடுக" என்றார். புத்தராம் அருள் மலையில் தோன்றிய அமைதிச் சுனைகளை எண்ணுதல் அரிது! மிக அரிது! அவர் உரை மணிகள் சிலவற்றை அறிதல் நலந்தரும்.

"என்னை நிந்தித்தான், அன்னை அடித்தான், என்னை வென்றான், என்னை கொள்ளையிட்டான்- இத்தகைய எண்ணங்கள் இல்லாதவர்களிடம் வெறுப்புணர்வு நில்லாது."(4)

"எக்காலத்தும் பகைமை, பகைமையால் தணிவது இல்லை பகைமை அன்பினாலேயே தணியும்.”

(5)

'எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் நோவடையுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ

அது நற்செயல் ஆகாது."

“பிறரைத் துன்புறுத்துவோன் முனிவன் அல்லன்;

பிறரை இகழ்பவன் துறவி அல்லன்.

(67)

(182)

1.தம்மபதம்.