உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

பிறந்து வளர்ந்து வாழ்ந்து அறவாழி உருட்டிய நாட்டையே எண்ணிப் பாராமல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கும் இழி நிலைக்கு இறங்குகின்றது என்றால் - பகை கொண்டு பழிச்செயல் செய்கின்றது என்றால் - அதனை என்னென்று கூறுவது!

“புத்தர் சரணம் கச்சாமி! (புத்தரைச் சரணடைகின்றேன்) தர்மம் சரணம் கச்சாமி! (தருமத்தைச் சரணடைகின்றேன்) சங்கம் சரணம் கச்சாமி!” (சங்கத்தைச் சரணடைகின்றேன்) என்று சொல்லி அமைவோம்!