உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

1945ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிலையம் உருவாகியது. அதன் பணி பெரிது! இன்னும் அது ஆற்ற வேண்டியுள்ள பணியோ மிகப் பெரிது!

அமைதி வாழ்க !

உலக அமைதிக்குப் பாடுபடும் அருட் பெரு மக்களுக்கு ஒரு பரிசிலை நிறுவியுள்ளார் ஒரு பெருமகனார். அவர் பெயர் ஆல்பிரட்டு நோபல் என்பது. அவரே வெடிமருந்து கண்டு பிடித்தவர். வெடிமருந்தாலேயே பொருள் ஈட்டியவர். வெடிமருந்து வாணிகர் அமைதிக்குப் பரிசு நிறுவியதும் அணு முதல் அழிப்புக் கருவிகளைக் கண்டவர் அமைதிப் பணியில் ஈடுபட்டதும் உலக நலத்திற்குரிய நல்ல அறிகுறிகள். இத்தகைய சூழ்நிலையை அருட்பெரு மக்கள் அப்பொழுது போரச்சம் அற்ற புத்துலகம் தோன்றும். அதனை வாழையடி வாழையாக வரவிருக்கும் மக்கள் புன்முறுவலுடன் வரவேற்பர்; வாழ்த்தும் கூறுவர். நாமும் 'வாழ்க' என அமைதி உலகை வரவேற்று வாழ்த்துவோம்.

பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.