உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

"உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்; உள்ளம் சிறுத்தால் உறவும் பகையே’

55

என்பது சிந்திக்கும் எவர்க்கும் சிறந்து விளங்கும் உண்மை! இஃது அறிவுத் தெளிவா? பட்டறிவா? சிந்தனை விளைவா? எல்லாம் கூடிய ஒருமுடிநிலை இது!

உள்ளம்விரிய, உலகம் உள்ளத்துள் வந்துவிடும்!

உள்ளத்துள் உலகம் அடங்குமா?

உள்ளத்துள் உலகம் அடங்க வில்லையானால்,

“யாதானும் நாடாமால் ஊராமால்"

என்னும் வள்ளுவம் பிறக்குமா?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்”

என்னும் பூங்குன்றம் பிறக்குமா?

“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே”

என்னும் தாயுமானம் தளிர்த்திருக்குமா?

உள்ள விரிவால் மராத்தியம் குசராத்தியம் இராசத் தானியம் என உலாவிரிவாயது! உலாவிரிவு எழுத்தாயது! எழுத்து வெளியீட்டுக்குரிய தொகை? உலாவுக்கான தொகையில் ஒரு கால்பங்குதானும் உலாவுக்கு அழைத்தவர் வாங்க மறுத்தால்...... அத்தொகை நூல்வெளியீட்டுத் தொகையாக கொடையாகக் கொள்ளத்தடை என்ன? இவ்வகையில் இந்நூல் வெளியீட்டுக்

கொடையர்

"வேலாயுதனார் - கலைநிதியர் சரவணர் அருள்மொழியர்"

என என், நலனார்நன்றிப் பதிவுக்கு உரியராயினர்

வாழிய நலனே! வாழிய நிலனே.

இரா. இளங்குமரன்