உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

97

சிற்பி, தூணின் மேற்குப் பக்கத்தில் அவர் திகைப்புடன் இருப்பதைக் காட்டுதலால் விளக்குகிறான்.

சிவகோசரியார் முகத்தில் வியப்புடன் கூடிய கவலை குடி கொண்டுள்ளது. அவர் முகத்திற்கு இளந்தாடி அழகு செய்கின்றது! இது குறிஞ்சி நிலம் என்பதற்காக யானை காட்டப்பட்டுள்ளது.

பொன் : சரி, இவரைப் பார். இவரும் முக்கண்மூர்த்தியே ஆவ.. நாற்கை நம்பியாகத் திகழும் இவரின் காலின் கீழே மிதிபட்டுக் கிடப்பவனைப் பார்!

கண்

மிதிபடுபவன்

கிடக்கும் அலங்கோலத்தையும்

மிதியின் அழுத்தத்தையும் மறந்து - ஏன் மிதிப்புக் கொடுமையைக் கூட நினையாமல் -வியப்போடு நம்மைப் பார்க்க வைப்பது கலையின் சிறப்புத்தானே! பொன் : ஆணவத்தை அரன் அலற அலற மிதிப்பது இது. நெஞ்சில் வலக்கால் மிதியை வாங்கித் தலை கீழே பட்டும் நிமிர்ந்து மேலே பார்க்கிறான் ஆணவன்; விழி பிதுங்கத் திணறுதலுடன் பார்க்கிறான்; அவன் கால் வளைந்து தலைக்குக் கீழே கிடப்பது தூணின் கீழ் பக்கத்தை வளைத்துக் கொண்டது. கேடயக்கை மேல் பக்கத்தைப் பற்றிக் கொண்டது; இவன் பெருவிரலையும் அதிலுள்ள நகத்தையும் பார்!

கண்

கண்

இந்த நகத்தால் இவன் கிழிக்கத் தொடங்கினால் நரசிங்கம் கிழித்த கிழிப்புத்தான்! ஆணவத்தை எவ்வளவு செம்மையாக மிதித்தாலும் மிதிகொஞ்சம் தளர்ந்தால் தலையெடுத்து மேலே பார்க்கும்! கீறும்; கிழிக்கும்! 'எண்ணிக் கொள்க' எனச் சொல்லில் காட்டாமல் கல்லில் காட்டியுள்ளான் கலைஞன்! நாம், 'நான் எனது என்னும் செருக்கு அறுப்போம்! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுப்போம்" என உறுதி கொள்வோம்.

பொன் : இந்த ஆணவனை 'முயலகன்' என நினைக்கிறாயா? : ஆம். அப்படித்தான் நினைத்தேன். உற்றுப் பார்த்தால் அவனல்லன். இவன் போரிட வந்தவன்போல் அல்லவா இருக்கிறான்!