உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

99

எனக்கு நினைக்க நாணமாக இருக்கிறது! நானே இப்பொழுதுதானே பார்க்கிறேன்.

பொன் : இப்பொழுது பார்க்கிறாய் என்பது குற்றமா? பார்ப்பதை எப்படிப் பார்க்கிறாய் என்றுதானே கருத வேண்டும்! கண்ணை மூடிக்கொண்டு காட்சி பார்ப் பவர்களையே நான் கூறுகிறேன். சரி; இதே போல் இம் முகப்பின் கீழைக்கோடியிலும் இசைத் தூண் உண்டு! வடக்கு ஆடி வீதியிலும் உண்டு! இன்னும் வியப்பு என்ன வென்று தெரியுமா? சிற்பங்களிலேயே இசைச் சிற்பங்கள் உண்டு. அவற்றைப் பல்வேறு இடங்களில் மெல்லெனத் தட்டினால் வெவ்வேறு ஒலியெழும், அவற்றை உள்ளே பார்க்கலாம். இம்மண்டப வாயிலின் கீழ்ப்பக்கத் தூணைப் பார்.

கண்

வன், குதிரையின் தலையில் இடக்காலையும், முதுகில் வலக்காலையும் வைத்துள்ளான். அருமையான கொண்டையுடனும் தொங்கு காதுடனும் விளங்கு கிறான். கொத்துப் பூக்களும் இடைத் தொங்கலும் அழகாகவே உள்ளன. முண்டாசுக் கட்டும் தலைக் குஞ்சமும் எடுப்பாகவே இருக்கின்றன.

பொன் : இவனை அரிச்சந்திரன் என்கின்றனர்; இதிலேயுள்ள இச் சிறிய வீரனைப் பார். இவ வன் கழுத்தில் மான் குட்டியைப் போட்டுக்கொண்டுள்ளான். இதோ தூண் மேலே உடும்பு! இந்த உடும்புப் பிடியைக் காட்டியுள்ள திறம் நன்றாக உள்ளது! கல்லிலேயே ஒரு வளையம் அடித்து அதனை உடும்பைக் கவ்வவிட்டு விட்டான்!

கண்

எந்த உடும்பு கவ்வுதலை விட்டாலும், இந்த உடும்பு கவ்வுதலை விடாது.

பொன் : அடுத்த கிழக்குத் தூணில் இருப்பவள் சந்திரமதி. கண் : அவள் கையில் வைத்துள்ள இறந்த குழந்தையே நன்றாக அவளை இன்னார் என்று காட்டுகின்றது.

பொன் : நாடு நகர் இழந்து அடிமைப்பட்ட நிலையிலும், தான் வடிக்கும் வடிவழகி ஆடை அணிகலங்களால் பொலி வாகவே விளங்கவேண்டும் என்று அந்தக் கலை நெஞ்சம் எண்ணியிருக்கிறது. 'முனிவன்' பறித்துக்