உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

103

'ஆடும் பரி, அணிசேவல்" என்றதற்குத் தக்கவாறு அவர் மயிலும், மயில்மேல் அவர் இருக்கும் இருப்பும் உள்ளன.

பொன் : தோகை விரித்தாடும் மயிலின் முதுகில் வலக்காலை ஊன்றியிருக்கும் முருகன், இடக்காலை மயிற் குதிரையின் அங்கவடியில் வைத்துள்ளார். நாற்கை யராக விளங்கும் இவர், மயிற்கடிவாளம் பற்றி இழுக்கிறார். இணைத்திரிசூலம் போல விளங்கும் ஒரு கருவியைப் பிடித்துள்ளாரே! இஃதென்னவென்று தெரிகின்றதா?

கண்

இதுதானே வச்சிரப்படை.

பொன் : ஆம்! இந்திரன் மகன் மணவாளன், கையில் வச்சிரம் வைத்திருத்தல் அருமையா? அடுத்து இருப்பவர் நாகராசர். ஐந்தலை நாகத்தின்கீழ் அழகாக விளங்குகிறார்.

கண்

உச்சிப் பெருங்கொண்டை சரியான உருண்டை. திருநீற்றுக் கீற்றும், ஏற்றிய ஒரு நாமமும்,தூக்கிய புருவமும், உயரத்தில் குறுகிப் பருத்த கழுத்தும், உதடும், உதட்டுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பட்டையும் நன்றாக அமைந்துள்ளன.

பொன் : கைவண்ணம் வெளிப்பட நின்ற இக்கவின் சிலையின் கைகள் இரண்டும் ஒடிந்துள்ள கொடுமை, நெடுமூச்சு விட வைக்கிறது. உருளை போன்ற காதுத் தொங்கல் புதுமையாக உள்ளது. அடுத்து அழகுக்கோலம் கொண்டு விளங்குபவள் கலைமகள்.

கண்

வீணை செய்யும் ஒலியில் இருப்பவள், வீணை ஏந்திய கையளாக விளங்குகிறாள்.

பொன் : வீணையின் நரம்புகளில் விளையாடும் கைவிரல் களும் பார்! மேலே மூன்று விரல்கள் வருடுகின்றன. கீழே நான்கு விரல்கள் வருடுகின்றன.

கண்

முழந்தாள்வரை முற்றுடையுடுத்த இவ்வம்மை, வீணைக்கு ஏற்ப நெளிந்து வளைந்து இருப்பது கவின் காட்சியாம். இவள் காதில் சக்கரத் தோடு; நடுவே திருகுப் பூ; உச்சியில் முருகுப் பூ!