உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

பொன் : முனிவர்கள் என்ன இதற்குக் குறைந்தவர்களா? எதிரே நிற்கும் மோகினிக்கு இடப்பால் மூவர்; வலப்பால் நால்வர்; ஒரு வேடிக்கை, ஒரு முனிவர் மேலே இன்னொரு முனிவர்!

கண்

“உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு"

என்பதை நிலை நாட்டுகிறார் இந்த முனிவர். அடுத்துத் தருமனுக்கு எதிரே அருச்சுனனும், வீமனுக்கு எதிரே விலங்கும், இரதிக்கு எதிரே மன்மதனும், வீரபத்திரர் களும் உள்ளனர். இவர்களைப் பற்றிக் கிளிக்கூட்டு மண்டபத்தில் பார்த்துள்ளோம்.

இரதி மிக அழகாக உள்ளாள்.

பொன் : சொல்ல வேண்டுமா? அழகிய பெண்களை இரதிக்கு ஒப்புமை கூறுவது என்றால், அவள் அழகிக்கு அழகியாகத் தானே இருக்கவேண்டும். ஆதலால் அழகெல்லாம் திரட்டி அவளைப் படைத்துள்ளனர். : நாம் அன்னத்தைக் கண்டது இல்லை. படித்திருக் கிறோம்! எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்க்கிறோம். அது போல் இரதியைக் கற்பனை செய்து பாடியவன் வாக்கையெல்லாம் திரட்டி வடித்

கண்

துள்ளான் சிற்பி!

பொன் : அன்னத்தின் தோகைச் சுருளைப் பார்; வாத்துக்கால் போன்ற அதன் காலையும் பார்; அவர் தோழி ஒருத்தி பன்னீர்க் குடுவை வைத்துள்ளாள்; சாமரம் வீசுகிறாள்!

கண்

பாவம்! அன்னத்தில் இருக்கவே இவளுக்கு வியர்த்துக் கொட்டி வெப்பமாக இருக்கிறது போலும்.

பொன் : இவள் சிலையிலும் வீரபத்திரர் சிலையிலும் ஒரு தனிச் சிறப்புண்டு முன்னே சொன்னேனே! இசைச் சிற்பங்கள் இவை. வெவ்வேறு இடத்தில் தட்டினால் வெவ்வேறு இசையுண்டாகும்!

கண்

நல்லவேளை! இது பலருக்குத் தெரியாது; தெரிந் திருந்தால் இவை உருத்தெரியாமல் கூடப்போயி ருக்கும். சும்மாவே எத்தனை சிற்பங்களை உடைந்த - உடைக்கின்ற கைகள் இந்நாட்டில் உண்டு!

-