உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

109

பொன் : ஆம்! இதனையும் இம் மண்டபத்தையும் கட்டிய விசயரெங்க சொக்கநாத நாயக்கர் இத் தூணில் சிலையாக நிற்கிறார். இதற்கு அழகிய மேற்கட்டு மரச்செதுக்குத் திருப்பணிகளால் செய்த பெருந்தகை வயிநாகரம் வெங்கடாசலம் செட்டியார், நாகப்பச் செட்டியார் படங்கள் இவை. இப் பெருமக்கள் இக்கோயில் திருப்பணிக்குச் செய்துள்ள செயற்கரும் பணி அளவில் அடங்காது, இதிலுள்ள தனிச்சிறப்பு, பிறரிடம் ஒருகாசும் வாங்காமல் தம் பணத்தைக் கொண்டே செய்தது ஆகும்.

கண்

இம் மேடைக்குத் தென்பாலும் வடபாலும் உள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ள உலகத் தோற்றம் உயிர்த் தோற்றம் பற்றிய ஓவியங்கள் புதியனவா?

பொன் : இல்லை! பழைய ஓவியங்களைப் புதுப்பித்து எழுதப் பெற்றவை ஆகும். இதற்குத் தெற்கே உள்ளது முத்துராமய்யர் மண்டபம்! இதில் அவர் திரு வுருவமும் உள்ளதைப் பார். இப்படியே தெற்கே சென்றால் அம்மை கோயில் திருவாயில்; இதனைக் கடந்தால் யானைகட்டும் மால் கிழக்கேயும், வன்னியடிப் பிள்ளையார் கோயில் மேற்கேயும் உள்ளன.

கண்

வன்னி மரத்திற்கும் இத் திருக்கோயிலுக்கும் மிகத் தொடர்பு உண்டே! வன்னியும் கிணறும் இலிங்கமும் வரவழைத்த திருவிளையாடல் சொல்லப்படுகிறதே. பொன் : அந்த வன்னிமரம் இதுதான் என்று சொல்கின்றனர். மரம் பழமையானதுதான்! நாம் இப்பொழுது பார்ப்பது கீழ ஆடிவீதி. கோயில் நூல்நிலையம், தேவாரப்பாடசாலை, திருப்புகழ்ச்சபை, சைவ சித்தாந்த சபை, தெய்வநெறிக் கழகம், பன்னிரு திருமுறை மன்றம் ஆகியவற்றைக் காணலாம். திருக்கோயில் அலுவலகம்; மேற்கு ஆடி வீதியில் பசுமடமும், சிவகங்கைத் திருக்கோயில் அலுவலகமும் உள்ளன. இந்த வடமேற்கு மூலையில் இருப்பது திருப்புகழ் மண்டபம்; வடக்கே இருப்பது திருவள்ளுவர் மன்றம்; இதனை அடுத்து இவ் வடக்குக் கோபுர வாயிலின் இருபாலும் இருப்பவை இசைத் தூண்கள். "கல்லும் சொல்லாதோ கவி" என்பதை

து