உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கண்

31 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

வெயிலொளியை வாங்கிப் பன்மடங்கு பொன் னொளியாக வெளிவிடும் இரண்டு விமானங்கள் உள்ளன. அவற்றுள் வடக்கே இருப்பது சொக்கர் விமானம்; தெற்கே இருப்பது அம்மை விமானம்; சரிதானே!

பொன் : எனக்குமேல் உனக்கு தெளிவாகி விட்டது; இனி நீ யாருக்கும் வழிகாட்டலாம்.

கண்

போதும்! போதும்! கீழே இறங்குவோமா? இந்தக் கோயிலின் நீள அகலம் எவ்வளவு?

பொன் : இக் கோயிலின் நீளம் 254.1 மீட்டர். அகலம் 237.6

மீட்டர்.

கண் : எந்தக் கோபுரமாவது இரட்டைப்பட நிலைகளைக் கொண்டுள்ளதா? இல்லையே!

பொன் : ஒற்றை இலக்கப் பெருமை! ஒற்றை மேல் நம்பிக்கை! எல்லாம் ஒருவன் செயல்.

கண்

இன்னொன்று; நாம் கோபுரவாயில் தூண்களிலும், திருமதில் சுவர்களிலும் பல கல்வெட்டுகளைப் பார்த்தோம். அவை பலகாலம் வெள்ளையடித்தும் அழுக்குப் படிந்தும் என்ன என்றே தெரியாமல் போய்விட்டன. சில கல்வெட்டுகள் இனிய பாடல் களாகவும் அமைந்துள்ளன; அரிய வரலாற்றுக் குறிப்புகளுக்கு இடமாக உள்ளன. இவ்வாறாகவும் இவற்றை மறைய விடுவது முறையாகுமா? எல்லாம் விளம்பரம்; எங்கும் விளம்பரம் என்னும் காலம் இது. "கோயில் வழிபாட்டு வேளை; கும்பிட வாருங்கள்” என்று வேளைதோறும் ஓங்கி மணியடிக்கிறோம். ஆனால், வரலாற்று உண்மையை

ஒழியவும் விடுகிறோம்.

ஒளியவும்,

பொன் : நல்லதையே கேட்டாய். நான் தொடக்கத்திலே சொன்னேன்; இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்று. அவற்றுள் ஒன்று இது. கல்வெட்டு இருக்கும் பகுதியை நன்றாகத் துடைத்து அவ்வெழுத்துக்களைப் படிக்குமாறு வாய்ப்புச் செய்ய வேண்டும். அதனை முன்னரே படியெடுத்துள்ளனர். அச்சிட்டும் உள்ளனர். அதனைச் செப்பமாக எழுதி