உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

135

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றினார். மீனாட்சியம்மையே ஒரு குழந்தை வடிவில் வந்து திருமலை மன்னர் கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்துக் குமரகுருபரர் கழுத்தில் போட்டு மறைந்தனள் என்பர்.

அம்மை அழகும் அருளும் :

காண்பார் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் பசுங்கிளி ஒன்றைக் கையில்கொண்டு பச்சைப்பசுங் கிளியாய் மீனாட்சியம்மை நின்ற கோலத்தில் அருள் செய்கிறாள். அந்த அழகிலே சொக்கித்தான் அவளின் அருமைப்பிள்ளை குமரகுருபரர்,

தொடுக்குங் கடவுட் பழம்பாடல்

தொடையின் பயனே! நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்

சுவையே! அகந்தைக் கிழங்கையகழ்ந்(து} எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்(கு} ஏற்றும் விளக்கே! வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே! எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள் ளத்திலழ (கு) ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே! மதுகரம் வாய் மடுக்கும் குழற்கா டேந்துமிளம் வஞ்சிக் கொடியே! வருகவே! மலயத் துவசன் பெற்றபெரு

வாழ்வே! வருக வருகவே!

என்று பாடினார். அம்மையைப் பிள்ளையாக்கி வரவேற்ற அருமைப் பிள்ளையின் பாடலை நினைந்து அம்மையை வாழ்த்துவோம். பள்ளியறையும் அம்மை பக்கத்திலேயே உள்ளது.

முக்குறுணிப் பிள்ளையார் :

அம்மையை வணங்கிக் கிளிக்கூட்டு மண்டபத்திற்கு வரும் வழியில் முத்துவெளியும் முத்து லிங்கமும் உள்ளன; சின்னீசுவரர் கோயிலும் உள்ளது. அடுத்துள்ளது நடுக்கட்டுக் கோபுரம்.