உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31ஓ

இப்படி மூன்று மார்புடன் பிறந்துள்ளதே என்று இறைவனை வேண்டி வருந்தினான்.

"பெண் என்று பாராமல், ஆண்பிள்ளை எனக் கொண்டு வளர்த்து, அரசியாக்கு! அவளுக்கு ஏற்ற கணவன் வரும்போது. அவள் மார்புகளுள் ஒன்று மறைந்து விடும்" என விண்ணொலி கேட்டது. அரசன் மகிழ்ந்து அக்குழந்தைக்குத் 'தடாதகை' எனப் பெயரிட்டு வளர்த்து, உரிய பருவத்தில் முடிசூட்டு நிகழ்த்தினான். அவள் அரசு செய்ததால் பாண்டி நாடு 'கன்னி நாடு' எனப்பட்டது.

5. தடாதகை திருமணம்

முடிசூடிய தடாதகை திசை வெற்றி கொள்வதற்காகப் படையுடன் புறப்பட்டாள். மண்ணுலகனைத்தும் வென்று விண்ணுலகும் சென்றாள். அவள் வருகை கண்ட இந்திரன் ஓடி ஒளிந்தான்.பின்னர்க் கயிலை சென்றாள். சிவகணங்களுடன் போரிட்டுத் தோற்றோட வைத்தாள். நந்தி ஓடிப்போய்ச் சிவபெருமானிடம் செய்தியை உரைக்க அவனே போருக்கு

வந்தான்.

பெருமானும் தடாதகையும் நேருக்கு நேர் நின்று பார்த்த போது, தடாதகையின் மார்புகளில் ஒன்று மறைந்தது. இதனைக் கண்ட அமைச்சர் சுமதி என்பவள் 'இப்பெருமானே உங்கள் கணவராவான்' என்று பழஞ் செய்தியை நினைவு படுத்தினாள். பெருமானும் அடுத்த திங்கள் கிழமையில் மணந்து கொள்வதாகச் சொல்லி மதுரைக்குச் செல்ல விடுத்தான். அவ்வாறே வந்து திருமணம் செய்து கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தான். 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது

தடாதகைப் பெருமாட்டியின் திருமணம் முடிந்ததும், வந்திருந்தவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தனர். அவர்களுள் பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவர் எனப்படும் வியாக்கிரபாதரும் "இறைவன் திரு நடனம் கண்டால் அல்லது நாங்கள் உண்ணமாட்டோம்" என்றனர். பெருமான் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறினான்.

கூடியிருந்த அனைவரும் கோயிலுக்குச் சென்றனர். அங்கே வெள்ளியம்பலம் தோன்றியது. அதில் திருநடனம் ஆடினான் இறைவன். அவ்வாடல் கண்டு மகிழ்ந்த பதஞ்சலி யாரும் புலிக்கால் முனிவரும், "இறைவனே என்றும் நின் திரு நடனம்