திருவிளையாடல் கதைகள்
179
நிறுத்தளந்து கூறும் வணிகரியல் போலச் சொல்லாழம் பொரு ளாழம் கண்டு துலைக்கோலின் நாவுபோல் நடுவு நிலையில் கூறினான். அதனால் புலவர்கள் பகைவிட்டனர்; நட்புற்று வாழ்ந்தனர்.
56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது
.
குலேச பாண்டியன் என்பவன் சங்கப்புலவருள் ஒருவனாம் சிறப்புக் கொண்டவன். அவன் புலமைநலம் அறிந்த இடைக் காடன் என்னும் புலவன் அவனைக் காணவந்தான். தான் இயற்றிய பாடலைப் பாடினான். வழுவிலாப் பாடலாக இருந்தும் பொறாமைக் குணத்தால் குலேச பாண்டியன் தலையசைத்துக் கேட்டானல்லன். அஃறிணையெனச் செவிக் கொடாது இருந்தான். இதனால் வருந்திய இடைக்காடன் திருக்கோயிலுக்குச் சென்று, 'என்னை இகழ்ந்தானல்லன் சொல் வடிவாம் அம்மை யையும், சொற்பொருள் வடிவாம் உன்னையுமே இகழ்ந்தான். எனக்கென்ன?" என்று கூறி விட்டுப் புறப்பட்டான்.
இடைக்காடனைத் தொடர்ந்து இறைவன் இறைவியோடு வேற்றுருக் கொண்டு தன்கோயிற்கு நேர் வடக்கே வையைக்குத் தெற்கே கோயில் கொண்டான். சங்கப் புலவர்களும் அவர்களைத் தொடர்ந்தனர்.
காலையில் வழிபாடு செய்யச் சென்றவர் இலிங்கத்தைக் காணாராய் அரசனுக்கு அறிவித்தனர். அவன் அடியற்ற மரம் போல வீழ்ந்து புலம்பினான். அப்பொழுதில் சிலர் ஓடிவந்து வையைக்குத் தென்பால் புதியதோர் கோயில் கண்டமையை உரைத்தனர். ஆங்குச் சென்று இறைவனைக் கண்டான். பலவகை யாகப் போற்றினான். இறைவன் விண்ணொலியால் "மன்னவ நீ வேறு தீங்குடையவன் அல்லை. இடைக்காடனை இகழ்ந்தாய்; அவனிடத்து வைத்த அன்பாலயாம் வந்தோம்" என்றான். "சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை" என்று பணிந்து றைவனோடு புலவர்களையும் அழைத்து வந்தான். இடைக் காடனுக்கு வரிசை பல செய்தான். புலவர்கள் பொறுத்தருளுமாறு வேண்டினான்.புலவர்கள் வாழ்த்தினர்.
57. வலை வீசியது
இறைவன் இறைவியைத் தனியிடத்தில் வைத்து நான்மறைப் பொருள்களை ஒருபோது உரைத்தான். அவள் எக்காரணத் தாலோ அப்பொருளை ஆர்வமின்றிக் கேட்க, “நீ பரதவர் மகளாக" எனச் சாவமிட்டான் இறைவன் "நின்னைப் பிரிந்து