உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

185

உறுதிப்படுத்தி யிருந்தான். அந்நிலையில் சிலகாலம் செல்ல வணிகன் இறந்தான். அவன் மனைவியும் அவனைத் தொடுத்து இறந்தாள். மதுரையில் இருந்த மருகன் அறிந்து வருந்தி மாமன் இருந்த பட்டினம் அடைந்து அவன் பொருளை எடுத்துக் கொண்டும் அவன் மகளை அழைத்துக் கொண்டும் நடந்து வந்தான். திருப்புறம்பியம் என்னும் ஊர்க்கு அவர்கள் வரப் பொழுது போயிற்று. அங்கே கோயிலில் தங்கினர். அங்கே படுத்திருந்த வணிகன் மருகனைப் பாம்பு தீண்டிற்று. அவன் உடனே இறந்தான். வணிகனின் மகள் ஆறாத் துயருற்று அழுதாள்; புலம்பினாள்; பலப்பல கோயில்களுக்குஞ் சென்று பதிகம் பாடிவந்த சம்பந்தர் அங்குவந்து நிகழ்ந்ததறிந்தார். அருட்கண்சாத்தினார்; நஞ்சம் தீர்ந்து எழுந்தான். சம்பந்தரை வணிகன் மருகனும் மகளும் ம் வணங்கினர். அவர்களை

மணமுடித்துக் கொள்ளுமாறு சம்பந்தர் கூற வணிகன் மருகன், எங்கள் இனவரும் இல்லாமல் சான்றும் இல்லாமல் மணமுடித்தால் பின்னர் என்னாமோ?" என்றான். "இவ்வன்னியும் கிணறும் இலிங்கமும் சான்றாம்" என்றார் சம்பந்தர். அவ்வுரை யேற்று மணமுடித்துக்கொண்டு மதுரைக்கு வந்தனர். அவனுக்கு, முன்னரே மனைவியும் மக்களும் இருந்தனர். இளையவள் வந்து சில்லாண்டுகளில் ஒருமகன் பெற்று மகிழ்ந்திருந்தனர். ஒருநாள் மூத்தாளின் மக்கள் இளையாள் மகனை அடித்தனர். இளையாள் அவர்களை வைதாள். "நீ எவளோ? நீங்கள் திருமணம் செய்ததற்கு என்ன சாட்சி?" என்று மூத்தவள் பழித்தாள். இளையவள் கோயிலையடைந்து இறைவனை வேண்டினாள். கோயிலின் தென்கிழக்கில் வன்னியும் கிணறும் இலிங்கமும் தோன்றிச் சான்று காட்டின. கணவன் மூத்தவளை விலக்கிவிட எண்ணினான். "எனக்குத் தாயன்னவள் அவள்; நாங்கள் இருவரும் ஒருவராய் வாழ்வோம்" என்று கணவனிடம் வேண்டினாள் இளையவள். கணவன் ஏற்றுக்கொண்டு இறைவனை வாழ்த்தி வாழ்ந்தான்.