மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
191
தமிழுக்கெனப் புலமைத் தேர்வுத் திட்டம் ஒன்றனை அமைத்து. அதனை நடைமுறைப்படுத்திப் புலமைப் பட்டமும், பரிசம் பாராட்டும் வழங்கிப் பல்கலைக் கழகத்திற்கு வழிகாட்டிய பெருமைக்குரியது பாண்டித்துரையார் கண்ட பைந்தமிழ்ச் சங்கம். இற்றைக் காலத் தமிழ்ப் பட்டங்களுக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச்சங்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம் இன்ன பல அமைப்புகளுக்கும் கால்கோளாக அமைந்தது மதுரை நான்காம் தமிழ்ச்சங்கமேயாம்.
தனி மாந்தர்க்கு வரலாறு உண்டு; நாட்டு வரலாறும் பிற பிற வரலாறுகளும் உண்டு. அவ்வாறே சில பல பொது அமைப்புகளுக்கும் வரலாறு உண்டு. பொது அமைப்புகளின் வரலாறோ, தனி மனிதர் வரலாற்றையும் நாட்டு வரலாற்றையும்
ணைக்கும் பாலமாய் இயல்வதாம். அதிலும், இவ்வரலாறோ அவற்றுடன் புலவர் வரலாறும், மொழி வரலாறும், இதழ் வரலாறும் இன்னபிறவும் இணைந்ததாம்.
இவ்வரலாறு, விரிவுக்குரியது இணைக்க வேண்டி செய்திகளும் குறிப்புகளும் பலவுள. எனினும் தமிழ்ச்சங்க வரலாற்றை அறிந்து கொள்ள விழைவார்க்கு வேண்டுமளவு செய்திகளைக் கொண்டுள்ள அடக்கப் பதிப்பாக இது வெளிப்படுகிறது. வேண்டுமேல் வரும் பதிப்புகளில் விரித்துக் கொள்ள வாய்ப்புளது.
து
நெடிய பல ஆண்டுகளின் முன்னரே, சங்க வரலாற்றை எழுதும் ஆர்வம் என்னுள் எழுந்தது. அவ்வார்வத்தால், பல்வேறு நூலாய்வுகளின் இடை இடையே தமிழ்ச்சங்க வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வந்தேன். ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது, தமிழ்ச்சங்க வரலாறு கட்டாயம் எழுத வேண்டும் என்னும் உணர்வு என்னுள் கிளர்ந்தது. அக்கிளர்ச்சியை வரவேற்று நூலாக்கத்திற்கு ஊக்கிய பெருமக்கள் இந்நாள் தமிழ்ச் சங்கச் செயலாளர் திருவாளர் டி.பி.எம். பெரியசுவாமி அவர்களும், தமிழ்ச்சங்க ஆட்சிக் குழுவினரும் ஆவர் குறிப்பாகச் செயலாளர் அவர்கள் இந்நூல் வெளியீடு தொடர்பாக நல்கிய ஆர்வமும் அக்கறையும் நெஞ்சை நெகிழ்விப்பனவாம்.
இவ்வரலாறு சிறப்புற வெளிப்படச் செயலாளரும் ஆட்சிக் குழுவினரும் செய்துள்ள உதவிகள் பல. அவை: 1) வேண்டும் குறிப்புகளைத் தட்டின்றிப் பெற்றுக்கொள்ள எப்பொழுதும் உதவியாய் இருந்தமை. 2) வேண்டும் படங்கள்