மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
201
என்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும் கூத்தும், வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை
என்ப
79
இக்குறிப்புகளை யெல்லாம் அப்படி அப்படியே ஏற்றுக் கொள்ளத் தடைகள் உள. எனினும், சில அடிப்படை உண்மைகள் வெளிப்படுகின்றன. அவற்றைத் திரட்டிக் காண்போம்.
1)
2)
3)
4)
5)
6)
7)
பாண்டிய வேந்தர்கள் தம் தலைநகரில் தமிழ்ச்சங்கம் நிறுவினர்.
அவ்வேந்தர்கள், அச் சங்கத்தின் புரவலர்களாகத் திகழ்ந்தனர்.
வழிவழியாகப் பாண்டிய வேந்தர்களால் தமிழ்ச்சங்கம் போற்றிக் காக்கப் பெற்றது.
புரவலர்களாக விளங்கிய வேந்தர்களுள் பலர், புலவர்களாகவும் விளங்கினர்; புலவர்களோடு கூடித் தமிழாய்ந்தனர்.
புலவர்களாக விளங்கிய, வேந்தர்களுள் சிலர், கவியரங்கேறும் சிறப்பும் பெற்றனர்.
பாவன்மை மிக்க புலவர்களுள்ளும் தேர்ந்தெடுக்கப் பெற்ற சிலரே ஆய்வு அரங்கத்தில் இடம் பெற்று
விளங்கினர்.
புலவர்கள் தம் ஆய்வுக்கு வரம்பு நூலாக ஒன்றையோ பலவற்றையோ தேர்ந்து கொண்டனர். அவற்றை உரைகல்லாக் கொண்டே புதுநூல்களை ஆராய்ந்தனர்; அந்நெறி மாறாமல் புதுநூல்கள் இயற்றினர்.