உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செந்தமிழ் வளர்த்த தந்தையும்

மைந்தரும்

சேதுபதிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவர் முத்துராமலிங்க சேதுபதி; அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவர் தம்பி அரசராகவும், தமையனார் அமைச்சராகவும் இருந்து சேதுநாட்டு ஆட்சியும் செந்தமிழ் ஆட்சியும் சிறப்புறச் செய்தனர்.

"பொன்னுச்சாமித் தேவரும் அவர் இளவலும் கல்வி அறிவுகளிலும் அரசியல் துறைகளிலும் தக்க பயிற்சியை இளமை முதலே பெற்று வந்தவர். ஆதலால் அவ்விருவருமே பிற்காலத்தில் அத்துறைகளில் மேம்பட்டு விளங்கலாயினர். தமிழ்ப் புலமையானது பரம்பரைச் செல்வமாக இவர்கட்கு வாய்த் திருந்தது.திருக்குறள், இராமாயண பாரதங்கள், சில்லறைப் பிரபந்தங்கள் முதலியவற்றில் வேண்டிய பயிற்சி இவர்கட்கு இளமை முதலே உண்டு. கவிபாடுந் திறமையும் புலவர்களின் கூட்டுறவால் தக்கபடி இவர்கள்பால் அமைந்திருந்தது. கம்பராமாயணத்தில் அபிமானமும் ஆராய்ச்சியும் தேவர்க்கு மிகுதியாம். அப்பெருங் காவியம் பற்றிய பிரசங்கங்கள் அவர் திருமுன்பு அடிக்கடி நடந்து வந்தன. தமிழ்நாட்டின் பலதிசை களில் இருந்தும் வந்து பரிசுகளும் வரிசைகளும் பெற்றுப் புலவர்கள் செல்வதை இராமநாதபுரம் நாளும் கண்டு கொண்டிருந்தது. அவருள் சொல்லணி பொருளணிகள் அமைந்த கவிகள் பாடி கௌரவம் பெறுபவர் பலர். அட்டாவதானி, சதாவதானி என்ற சிறப்புப் பெயர் தாங்கித் தங்கள் அவதானத் திறமைகளைக் காட்டிச் சிறப்படைபவர் சிலர். பிரபந்தங்கள் பாடிப் பெருமை பெறுவோர் பலர். அரிய உபந்நியாசங்கள் புரிந்து மதிக்கப் பெற்றவர் சிலர்.

"தேவரது அவையானது, ஆத்தானப்புலவர் குழுவால் எப்போதும் பொலிந்து விளங்கும். அப்புலவரெல்லாம் மேற்கூறிய துறைகளில் சிறந்திருந்ததோடு வாதங்கள் புரிவதிலும் வல்லவராயிருந்தனர். வடமொழிவாணர் சிலரும் அச்சபையை