214
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
சேதுபதி செந்தமிழ்க் கலாசாலைக்கு இலக்கிய இலக்கணப் புலமையில் சிறந்தோங்கிய பெரும்புலவர் திரு. நாராயண ஐயங்கார் தலைமையாசிரியராக அமர்த்தப் பெற்றார். நூலா ராய்ச்சிப் பகுதியின் தலைவராகச் சேதுபதிகளின் அவைப் புலவர் இரா. இராகவஐயங்கார் அமர்த்தப் பெற்றார். பாண்டியன் புத்தகசாலைக்குச் சேதுபதி வேந்தர்கள் தொகுத்து வைத்திருந்த நூல்களும், பொன்னுசாமித்தேவரும் பாண்டித் துரைத் தேவரும் தொகுத்து வைத்திருந்த நூல்களும் வழங்கப் பெற்றன. அன்றியும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அரிய பல ஏட்டுச் சுவடி களைத் தொகுக்கும் பணியும் தொடங்கியது.
தமிழ்ச்சங்கம், பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப் பெற்ற அமைப்பு அன்று; அரசின் பொருட் காடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எண்ணித் தொடங்கப் பட்டதும் அன்று. தங்கள் ஆளுகைக்கு உட்பட்டதும் தலைநகராக விளங்குவதும் ஆகிய முகவையம் பதியில் தோற்றுவிக்கப் பெற்றதும் அன்று.பண்டைநாளில் தமிழுக்கு இருந்த ஏற்றத்தையும் பின்னை நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்தி, அதனைப் பல்லாற்றானும் பண்டைநிலைக்கு உயர்த்துதல் வேண்டு மென்னும் பேரார்வப் பெருக்கால் மாநகர் மதுரையில் அமைக்கப் பெற்ற அமைப்பேயாகும். இத்தகைய சீர்மையில் அமைக்கப் பெற்ற சங்கத்திற்குச் செவ்விய நோக்கங்கள் வகுக்கப்பெற்றிருக்கும் என்பது வெளிப்படை. தொடக்க நாளிலேயே வகுக்கப் பெற்ற நோக்கங்கள் இவை:
1.
2.
3.
4.
தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்
இறவாதுள்ள தமிழ் ஏடுகளையும் அச்சிட்ட நூல் களையும் தேடிப் பெற்றுப் பலருக்கும் பயன்படுமாறு தொகுத்து வைத்தல்.
வெளிவராத அரியநூல்களை ஆராய்ந்து அச்சிட்டுப் பரப்புதல்
வடமொழி ஆங்கிலம் முதலாய மொழிகளில் உள்ள அரிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப்
பதிப்பித்தல்
5.
தமிழ்க் கல்வி பற்றிய இதழ் வெளியிடுதல்