உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

225

சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றிப் பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி ஐயரவர்கள் இயற்றிக் கொணர்ந்த 'மருதப்பாட்டு' என்னும் நூல் அரங்கேற்ற மாயது. அதற்கு, வேம்பத்தூர் திரு. பிச்சுவையர் அவர்களும் திரு.மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் சிறப்புப் பாயிரக் கவிகள் இயற்றிப் பாடினர்.

சித்தாந்த சாத்திரங்கள் பலவற்றையும் ஆய்ந்து எழுதிய 'சித்தாந்த ஞானரத்தினாவளி' என்னும் நூல் அதன் ஆசிரியர் திரு. பால்வண்ண முதலியார் அவர்களால் அரங்கேற்றப் பெற்றது. அதற்கத் திரு. மு. ரா. கந்தசாமிக் கவிராயர் சிறப்புப் பாயிரம் பாடினார்.

தவத்திரு மறைமலையடிகள் (வேதாசலம் பிள்ளை) தாம் அரிதின் ஆய்ந்து எழுதிக் கொணர்ந்த பட்டினப் பாலை ஆராய்ச்சியுரையை இனிதுறப் படித்தார். அதன் நடையழகும் பொருளழகும் அவையோரைக்கவர்ந்து பாராட்டச் செய்தன.

திரு.ஐ.சாமிநாத முதலியார் 'முன்னாள் இந்நாள்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையைப் படித்தார்.

திரு. வை.மு.சடகோபராமாநுசாசாரியார் இயற்றிய ஸ்ரீ பட்டர் வைபவம்' படிக்கப் பெற்றது.

பெங்களூர் மையக் கல்லூரிப் பேராசிரியர் திரு. S.கிருட்டிணசாமி ஐயங்கார் எம். ஏ. எழுதியனுப்பிய 'கடை வள்ளலார் காலம்' என்னும் கட்டுரை ஆராயப்பெற்றது.

திருவனந்தபுரம் திரு. இலக்குமணப்பிள்ளை அவர்கள் எழுதிய 'இரவிவர்மன்' என்னும் நாடகமும், திரு.அப்துல் காதிறு அராவுத்தர் அவர்கள் இயற்றிய 'தமிழ்ச்சங்க மான்மியம்' என்னும் நூலும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் இராசகோபாலாச்சாரியார் அவர்கள் எழுதிய 'சுதேசகலாசாலை ஸ்தாபனம்' என்னும் கட்டுரையும், திரு. மு. ரா. கந்தசாமிக் கவிராயர் அவர்கள் இயற்றிய 'குமண சரிதம்' என்னும் நூலும் அவையில் படிக்கப் பெற்றன. மாம்பழக் கவிச்சிங்க காவலர் வழியினரும், வழியினரும், அவர் தம் பாடற் றொகுதியை வெளியிட்டவருமாகிய திரு. பழனிச்சாமியாசாரி அவர்கள், நாவலர் அவ்வக் காலத்தில் இயற்றிய தனிப் பாடல்கள் சிலவற்றைக் கூறி மகிழ்வித்தனர்.