உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

31

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

எக்காலத்தும் எவ்விடத்தும் தமிழையே பேசிவர வேண்டும் என்றும் உணர்வுமீக்கூர எடுத்துரைத்தார்.

இத்தகைய தீர்மானத்தின் பயனாலும், பின்னாளில் பெரியவர் அவினாசிலிங்கனார் போன்ற பெருமக்களின் உன்னிப்பான செயலாலும் தமிழாசிரியர்கள் ஆங்கில ஆசிரியர்களைப்போல் சம்பள ஒப்புநிலை பெற்றிருத்தல் கருதத் தக்கது. அதே பொழுதில் எஞ்சிய தீர்மானங்கள் இன்னும் தீர்மானங்களாகவே இருத்தல், தமிழர் தம் உணர்வின்மையை உலகுக்கு உரைப்பதேயாம்.

இருபத்தைந்தாம் ஆண்டுவிழா அட்சய ஆண்டு (1927) மாசித்திங்கள் 10, 11 ஆம் நாள்களில் நிகழ்ந்தது. சென்னைக் கல்வித்துறைத் தலைமையமைச்சர் டாக்டர் சுப்பராயன் அவர்கள் விழாத்தலைமை ஏற்றிருந்தனர். 'பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களையே ஆங்கிலக் கல்லூரிகளில் ஆசிரியராக அமர்த்தம் செய்ய வேண்டும்' என அரசு ஆணை பிறப்பித்திருந்தபொழுது அது. ஆதலால் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் தம் உரையில், "பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்களைக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிப்பதுடன், தனித்தமிழ்ச்சங்கத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோரையும் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர். 1980-81 ஆம் ஆண்டில் ஒலித்துவரும் இவ்வுரிமைக்குரல், 1927-இலேயே ஒலித்த இடம் மதுரைத் தமிழ்ச்சங்கமாகும். அதே விழாவில் பேசிய அமைச்சர், தமிழ் மொழிப்பயிற்சியில் தமக்குள்ள ஆர்வத்தை எடுத்துரைத்த துடன், இனிநிறுவப் பெறும் தமிழ்ப் பல்கலைக் கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் போலாது தமிழ் வளர்ச்சியையே முதன்மையான நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று 'அருமையாகவும் இனிமையாகவும் கேட்பார் மனத்தில் கிளர்ச்சி யுண்டாகக் கூறி, யாவரிடத்தும் தமிழ்ப்பற்று தலையெடுத்து நிற்குமாறு செய்தார்"

று,

'இதுதான் தமிழ்ப்பல்கலைக்கழகம்' 'இதுதான்தமிழ்ப் பல்கலைக் கழகம்' என இரண்டு பல்கலைக் கழகங்களை எதிர் நோக்கித் தமிழர் இலவு காத்த கிளியாகினர்! ஆனால், கல்வியமைச்சர் குறித்த தமிழ்ப்பல்கலைக் கழகம் தோன்றவே இல்லை! அவருக்குப் பின்னரும் எத்துணையோ கல்வி யமைச்சர்கள் அணிசெய்து அமர்ந்திருந்தும் வீற்றிருந்தும் சென்றுள்ளனர். தமிழ்ப் பல்கலைக் கழகத் தீர்மானமோ தீர்மான