மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
235
ஸ்ரீமத் திரு. நாராயணையங்காரவர்கள்
பரிசாசைகள்
தணிகைப்புராணம்
ஸ்ரீமத் சேற்றூர்
கவிராயரவர்கள்
புறப்பொருள்
வெண்பாமாலை
ஸ்ரீமத்
4.
செட்டியாரவர்கள்
கலிங்கத்துப்பரணி
சுப்பிரமணியக்
இராமலிங்கஞ்
சேதுபுராணம்
ஸ்ரீமத் டி.ஸி. நிவாசையங்காரவர்கள் வில்லிபாரதம் ஸ்ரீமத் ஏ. சுந்தரராஜ ஐயங்காரவர்கள்
ஸ்ரீமத். வி. முத்துக் குமாரசாமி முதலியாரவர்கள்
'நாடிய பொருள் கைகூடும்' நல்லபொழுது உண்டாகி விடுமானால், 'ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்!' அவ்வாறே திட்டமிட்டுச் செய்யத் தீர்மானித்த அகராதி வேலை தானே கைம்மேல் கனியாகக் கனிந்து நின்றது. அது 'கதிரவேல் பிள்ளை தமிழகராதி (Kadiravel Pillais Tamil Dictionary) என்னும் பெயருடன் தமிழ்ச் சங்கச் சொல்லகராதியாக வெளிவந்தது. ஈழத்துக் கதிரவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வைக்கப் பெற்ற அவ்வகராதியை வெளியிடும் பொறுப்பைத் தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொண்டது. திருவாவடுதுறை ஆதீன வித்துவானும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் சைவ நூற் பரிசோதகருமான சே. ரா. சுப்பிரமணியக் கவிராயராற் பரிசோதிக்கப் பெற்றுத் தமிழ்ச் சங்க முத்திராசாலையில் பதிப்பிக்கப் பெற்றுத் தமிழ்ச் சங்கத்தின் 8 ஆம் வெளியீடாக வெளிவந்தது. அதன் மூன்று பாகங்களும் தனித் தனியே வெளிவந்தன.
முதலிரு பாகங்களும் 1913 ஆம் ஆண்டுக்கு வெளிவந்தன. ஆனால் மூன்றாம் பாகம் பத்தாண்டுகள் கழித்து 1923 ஆம் ஆண்டு (துந்துபி மாசி 18) வெளியாயது. இவ் விடைவெளி யேற்பட்ட காரணத்தைப் பதிப்பாசிரியர், மூன்றாம் பாக முகவுரையில் சுருக்கமாக வரைந்துளார்.
"இவ்வகராதியின் முதல் இரண்டு பாகமும் வெளியிட்ட பின் யான் திருவாவடுதுறை யாதீனத்திற் பல ஆண்டு தங்கியிருக்க நேர்ந்தமையாலும், மறுபடி யான் இங்கு வந்து இம்மூன்றாம் பாகத்தை விரைவில் வெளியிடக்கருதி அச்சிட்டு வருங்கால் 1920ம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் நாள் சங்கத்தில்