246
―
இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ
நடந்தன வுரைத்தேன். உடனே அவர்கள் கலாசாலையில் யான் பெற்று வந்த ஊதியத்தை ஓராண்டுவரை, வேலையின்றிப் பெறுமாறு ஆணை செய்தளித்ததூஉம் அன்றி இருநூறு வெண்பொற் காசும் பரிசிலாக அளித்தார்கள். அவர்கள் செய்த பேருதவியை யான் என்றும் மறவேன்' கூறுபவர் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார். அவர் இயற்றிய தொல்காப்பியச் சண்முகவிருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிர விருத்தியில் 'நன்றிகூறல்' பகுதியில் நவில்கின்றார்.
இருபத்தைந்து
-
ஆண்டுகள்
-
பணிமூப்புடையவராக
இருந்தாலும் ஒன்றரையாண்டுக்காலம் மருத்துவ விடுப்புக்கு உரிமையாணை பெற்றவராக இருந்தாலும் - இரண்டு திங்களுக்கு மேல் மருத்துவ விடுப்புப் பெறுவதற்கு 'மருத்துவக் கழகக் குழுவின்' ஆணைபெறவேண்டும் என்னும் இன்றை நிலைமை எங்கே? 1905 ஆம் ஆண்டில், பாண்டித்துரையார் செய்த தமிழ்ச் சங்க ஆட்சி நிலைமை எங்கே? எண்ணிப்பார்க்க வேண்டிய செய்தி இது.
கலாசாலையில் நடத்தப் பெற்ற பிரவேசபண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று வகுப்புகளையும், அவ்வகுப்புகளுக்கு நடாத்தப் பெற்ற தேர்வுகளையும், அத் தேர்வுப்பாடத் திட்டங்களையும், அவற்றுக்கு வழங்கப் பெற்ற பரிசுகளையும் பின்னிணைப்புப் பகுதியில் உள்ள தீர்மானங் களில் கண்டு கொள்க.
தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவின் போது தேர்வுக்குழு 26.5.04 காலையில் கூடியது. அதில் மெட்ரிக், எப்.ஏ. பீ.ஏ. வகுப்புகளுக்குச் சங்கத்தாரால் நடாத்தப் பெறும் தேர்வுகளுக்கு உ.வே. சாமிநாதையர் முதலாக ஒன்பதின்மர் தேர்வாள் ராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். அவர்கள்
ஒன்பதின்மர்க்கும் இன்ன வகுப்பு இன்னதேர்வுத் தாள் என்றும் தெரிவு செய்யப் பெற்றன. விடைத்தாள் திருத்துதற்கு உதவித் தேர்வாளராக மூவர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தேர்வு நிகழும்
டங்களுடன், தேர்வுமேற்பார்வையாளர்களும் அக் கூட்டத்தி லேயே முடிவு செய்யப் பெற்றனர். மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், திருச்சி, கும்பகோணம், கூடலூர், சேலம், கோயம்புத்தூர், சென்னை என்பவை தேர்வு மையங்களாகக் கொள்ளப் பெற்றன.
தனித்தமிழ்த் தேர்வுக்குத் தேர்வு அலுவலர்களாகப் பதினைவர் தனியே தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இப் புலவர்களை