இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
255
இராசன் மற்றொருவர்! மற்றும், செந்தமிழ்க் கல்லூரியின் பணியை நினைக்கும் போது இவர்களுடன் திருவாளர்கள் கி. பழனியப்பன் வி. சண்முக சுந்தரம் ஆகியோர் பணிகளும் நினைவு கூரத்தக்கனவாம்.
செந்தமிழ்க் கல்லூரியைச் சீருற நடாத்துவதற்கு 10-6-73 இல் தனியொரு குழு அமைக்கப் பெற்றது. அதன் தலைவர் திரு.எம். சங்கரபாண்டியனும், தாளாளர், திரு.எம். தனுக் கோடி பாண்டியனும் ஆவர். திருவாளர்கள் டி. பி.எம். பெரிய சுவாமி, டி.ஏ. தெய்வசிகாமணி, கே. கந்தசாமி, என்.எஸ்.முத்து மலைச்சாமி, வே. இ. பரசுராம், இரா. வே. நாராயணன், வி.சி. சீனிவாசன் ஆகியோர் உறுப்பினர்களாக உளர். பல்கலைக் கழக நியமன உறுப்பினராகத் திரு. முத்தரசு உள்ளார்.