உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

257

தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூன்மொழி பெயர்ப் புக்களும் (3) தமிழின அருமைபெருமை அடங்கிய விஷயங்களும் தமிழாராய்ச்சியைப் பற்றியனவும் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் (4) இதன் வாயிலாக வெளிவரும். செந்தமிழின் உள்ளுறை இவ்வாறு முதல் இதழிலேயே இதழாசிரியரால் வகுத்துரைக்கப் பெற்றது. இவ்வுள்ளுறையை உண்மையுரையாகச் செந்தமிழ் நிலை நாட்டியது

1938 ஆம் ஆண்டில், செந்தமிழ் இதழைப்பற்றி ஆராய்ச்சித் துறைத்தலைவர் ஒருவர் கூறுகிறார்: "தமிழ்க் கல்வியிலும் தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ்ப் பத்திரிகையாம். ஒவ்வொரு மாதத்துப் பத்திரிகையினும் அது வரை அறியாத அரிய விஷயங்களைக் குறித்துச் சிறந்த கட்டுரைகள் பல வெளிவந்து கொண்டே இருந்தன. பத்திராதிபர் எழுதியன வெல்லாம் தமிழ் மணமும் ஆராய்ச்சி நலமும் செறிந்து விளங்கின; கற்பார்க்குப் பெருவிருந்தாய் அமைந்தன; ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாய் இருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெரும் பேராசிரியனாய் அமைந்து தமிழ் மக்கள் வீடுதோறுஞ்சென்று தமிழ்க்கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைக்கே உரியதாய் இருந்தது (ஆராய்ச்சித் தொகுதி பேரா. வையாபுரிப்பிள்ளை, முகவுரை)

இச் செந்தமிழ், இப்பொழுது எழுபத்தைந்தாம் தொகுதி யாய் இயல்கின்றது. இவ்வெழுபத்தைந்து தொகுதிகளை முற்ற முடிய ஒருவர் கற்பார் எனின், புலத்துறையில் அவர்க்கு இணை யொருவர் வாய்த்தல் அரிது. எத்துணை எத்துணைத் துறைகளில் எல்லாம் எழில்பெறத் தன் ஆற்றலைப் பரப்பியுள்ளது செந்தமிழ்! செந்தமிழைத் தொகுதிவாரியாகவும், பொருள் வாரியாகவும், துறைவாரியாகவும் பிரித்துத் தனியொரு தொகுதி வெளிப்படுமாயின் அத் தொகுதியை மூலப்பொருள் திறவு கோலாய்க் கொண்டு எத்துணையோ முனைவர்கள் தம் ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடும். இத்தகைய செந்தமிழ்ச் சீர்மையை முதல் தொகுதி ஒன்றை மட்டில் எடுத்துக் கொண்டு நாம் ஆய்வோம்.

செந்தமிழ் தொடங்கிய நாளில் அதன் ஆசிரியராக இருந்தவர் இரா. இராகவ ஐயங்கார்; துணையாசிரியர் மு. இராகவ ஐயங்கார்.