1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
261
ஆர்க்காட்டை ஒட்டிய வன்னிவேட்டு திருமால் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு. அது 'பரகேசரிவர்மன்' என்பவன் காலத்தது.
ஆர்க்காட்டுக்கு 3கல் தொலைவில் பாலாற்றின் வடகரையில் குடிமல்லூர் என்னும் ஊரில் இருக்கும் பூமீசுவரர் கோயில் கல்வெட்டு. அது இராஜநாராயண சம்புவராயனது ஆகும். ஆர்க்காட்டுக்கு வடமேற்கில் 5 கல் தொலைவில் உள்ள பாண்டவமலைக் கல்வெட்டு. அது நந்திபோதவர்மன் காலத்தது.
க்ஷை இடத்திலுள்ள ராஜராஜ தேவர் கல்வெட்டு.
ஆர்க்காட்டுக்கு எட்டுக்கல் கிழக்கில் உள்ள சக்கரமல்லூர்ச் சிவன்கோயிலில் உள்ள விக்கிரமசோழ தேவர் கல்வெட்டு. ஷை டத்திலுள்ள கோ இராஜகேஸரிவர்மர் கல்வெட்டு. க்ஷை இடத்திலுள்ள குலோத்துங்க சோழதேவர் கல்வெட்டு. க்ஷை இடத்திலுள்ள கண்டகோபால தேவர் கல்வெட்டு. க்ஷை இடத்திலுள்ள குலோத்துங்க சோழ தேவர் கல்வெட்டு. ஷை சக்காமூனூதர் பூசுந்தர ராசப் பெருமாள் கோயிலில் உள்ள சுந்தரபாண்டிய தேவர் கல்வெட்டு.
11-14 கும்பகோணம் வாணபுரீசுவரர் கோயில் கல்வெட்டுகள் 4. 15-16 கும்பகோணம் நாகேசுவரர் கோயில் கல்வெட்டுகள் 2
இப்பதினாறு கல்வெட்டுகளும் முதல் தொகுதியில் இடம் பெற்றுள. இவற்றை எழுதியவர் ச.ம.நடேச சாத்திரி, அ நாராயணையர் என்பார். இன்னும், சோழ சக்கரவர்த்திகள் என்னும் தொடர்கட்டுரை வி. கனகசபை அவர்களால் எழுதப் பெற்றது. ஆழ்வாராதியர் கால நிர்ணயம், மங்கம்மாள் சரித்திரம், ஜப்பான் சரித்திரச் சுருக்கம் என்பனவும் முதல் தொகுதியில் வெளிவந்தன. வை வரலாறும், கல்வெட்டும் தழுவிச் செய்யப்பெற்றவை. ஆழ்வாராதியர் கால நிர்ணயம் வரைந்தவர் து.அ. கோபிநாதராவ். இவர், கல்வெட்டுகள் மிகப்பல ஆய்ந்து செந்தமிழில் தொடர்ந்து எழுதிய அறிஞராவர்.
3. மொழிபெயர்ப்பு : ஆங்கிலம், வடமொழி ஆகிய ருமொழிகளில் இருந்தும் மொழிபெயர்க்கும் பணி முதல் தொகுதியிலேயே தொடங்கி விட்டது. 'சுமைல்சு' என்பார் இயற்றிய கேரக்டர் என்னும் ஆங்கில நூலை நல்லொழுக்கம்