270
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
என்று தமிழ்த் தென்றல் திரு. வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் (199) பொறித்துளார். அத்தகைய வாழ்வில் கண்ட ஆட்சியை தமிழுக்கே ஒப்படைத்தவாழ்வில் கண்ட ஆட்சியை ஏனையோர் ஆட்சியில் காண்டல்இயலுமோ?
பாண்டித்துரையார் சங்கத்தலைவராய் வீற்றிருந்தார். பக்கத்துணையாய்ப் பாற்கரர் இருந்தார்; குறுநில மன்னர்களும் பெருநிலக்கிழார்களும், வணிகச் செல்வர்களும் முந்து நின்று உதவினர். பாண்டியர் தொட்டதெல்லாம் துலங்கியது! அப்படித் துலங்கிய துலக்கம், வீழ்ச்சியுற்ற தமிழை வீறுபெற்றோங்கச் செய்தது.
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாவதும் உண்டு அன்றோ! அவ்வாறே, பைந்தமிழ்க் காவலர் பாற்கரர் தம் முப்பத்தாறாம் அகவையில் - சங்கம் தோன்றிய மூன்றாம் ஆண்டில் - இயற்கை எய்தினார்.
சனவரி 13இல் இராமேசுவரத்தில் தங்கியிருந்த பாற்சுரர் தம் நாட்குறிப்பில் என் வாழ்வுக் குறிக்கோள் என்னும் தலைப்பில் 32ஆவதாக, "என் உடன் பிறந்தார் பாண்டித்துரைக்கு முன்னே யான் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும்" என்று எழுதிய ஏந்தல் தம் வாக்கை முழுமையாகவே நிறைவேற்றிக் கொண்டார். நினைந்தோர் நெஞ்சம் உருக்கும் செய்தி இது. சங்கப் பயிர்க்கு ஊட்டமும் நீருமாக விளங்கிய வள்ளல் மறைவு, பாண்டித்துரையைப் படாத்துயருக்கு ஆளாக்கிற்று. பாவன்மை மிக்க அவர், பாற்கரரின் உரிமை உறவை உன்னி உருகினார்; சங்கத்திற்கு அவர் செய்த உதவிகளை யெண்ணி யெண்ணி உருகினார்; அவ்வுருக்கம் பாட்டாகப் பெருகியது.
என்னாவி உளங்குளிர அண்ணாவென்(று)
அன்பொடினி எனையார் சொல்வார்?
மன்னாமன் னாமன்னா எனயாரை
யானினிமேல் மதித்துச் சொல்வேன்?
பொன்னாடுந் தொழுஞ்சேது நன்னாடு புரந்தளிக்கப் போந்த தேவே! எந்நாடு சென்றனையோ எங்கள்குல
மணிவிளக்கே இசைத்தி டாயே