மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் ஓ
277
காவல்துறை ஆய்வாளர் அரங்கசாமி ஐயங்கார், துணை ஆய்வாளர் சாயேர்சு, அச்சக மேலாளர் சீனிவாசையங்கார், மதுரை ஆலைத் துணைக்காசாளர் வெங்கடகிருட்டிணராசு என்பவர்கள் ஆவர். இவர்களுக்குச் சங்கச் செயற்குழு தன் நன்றியைத் தீர்மான வடிவில் வழங்கியது. காவல்துறைக் காவலர்களுக்குப் பரிசும் வழங்கியது.
சங்கத்தலைவர் விலகுதல் விண்ணப்பம் சிலரை வருத்தியது போலும்! அவர்கள் சேதுபதியைக் கண்டு இரங்கினர். நிலைமையை எடுத்துரைத்தனர். சங்கத்தைக் கட்டிக்காக்க வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தினர். தாம் பதவியில் இருந்து விலகிக்கொள்ள விண்ணப்பம் தந்தும், சங்கத்தைச் சீர்செய்வதற்குப் பேரருட் பெருக்கால் பத்தாயிரம் வழங்கியவர் அல்லரோ அவர்! அவர் உள்ளம் உருகியது! இறுகியது! விலகுதல் விண்ணப்பத்தை விலக்கிக் கொள்ள இசைந்தார். 18-8-20-இல் எழுதிய அக்கடிதம் 24-8-20 இல் நிகழ்ந்த செயற்குழுவில் உறுதிப்படுத்திச் சான்றேட்டில் வைக்கப் பெற்றது.
சேதுபதி வேந்தர்க்குப் பொதுவாகிய செந்தமிழ் காக்கும் இயல்பில் சிறிதும் குறையாச்சீர்மையில் இலங்கியவர் இவ் விராச ராசேசுவர சேதுபதியார். இவரால் நலம் பெற்ற அமைப்புகள் பல; வளம்பெற்ற கலைஞர்கள் பலர்; வளர்புகழ் எய்திய புலமையாளரும் பலர்.
“உடனிருந்து உதவி செய்பவர்கள் முதலியோர் விஷயத்தில் எனக்குச் சிறிதும் பொருட்கவலையுண்டாகாதபடி பேரன்புடன் பொருளுதவி செய்து சில வருஷங்களாக ஆதரித்து வரும் ஸ்ரீஸேதுஸமஸ் தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர்களும் சென்னைச்சட்ட நிரூபணசபை அங்கத்தினர் களுமான கௌரவம் பொருந்திய மகா-ள-ள-ஸ்ரீ பா. இராஜ ராஜேசுவர ஸேதுபதியவர்களைப் பாதுகாத்தருளும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தை இறைஞ்சுகிறேன்" என்றும் "தமிழாராய்ச்சி' விஷயத்தில் வெகுகாலமாகச் சகாயம் செய்துவரும் சேது மன்னர்களாகிய மாட்சிமை பொருந்திய மஹா ராஜ ராஜ ஸ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதி அவர்களுக்கும் என் மனப் பூர்வமான நன்றியைச் செலுத்து கின்றேன்" என்றும் டாக்டர் உ.வே.சா. குறிக்கிறார்.
1. ஐங்குறுநூறு முகவுரை
2.சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் பக்.184
2