284
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
முறியடித்து வெற்றி கண்ட பெருமை தமிழ்ச்சங்கத் திற்கும், அதன் துணைத்தலைவர் டி.சி. சீனிவாசையங்கார்க்கும் உண்டு. இதனால் சங்கத்தின் பொதுப்பணிச் சால்பு புலப்படும். இத்தகு சங்கத்திற்குப் பேரிழப்பான நாள்களுள் ஒன்றாக 9-12-51 அமைந்தது. அந்நாளில் சங்கத் துணைத்தலைவர் டி.சி. சீனிவாச ஐயங்கார் இயற்கை எய்தினார்.
1901 இல் சங்கம் தொடங்கியது முதல் 1935 ஆம் ஆண்டு வரை சங்கத்தின் சிறப்புச் செயலாளராகவும், அதற்குப்பின் தம் வாழ்நாள் முழுவதும் துணைத் தலைவராகவும் பல்வேறு குழுக்களில் பொறுப்பாளராகவும் இருந்து பணி செய்தவர் அவர்.
சங்கத்துக்கு
இடருற்ற பொழுதுகளில் எல்லாம் ளைக்காமல் சளைக்காமல் பணியாற்றி அதன் தளர்ச்சியைப் போக்கியவர் அவர். குறிப்பாக இராசேசுவரமுத்துராமலிங்க சேதுபதியையும், சண்முக ராசேசுவர நாகநாத சேதுபதியையும் தமிழ்ச்சங்கத் தலைமைப் பொறுப்பில் முறைமைப்படி வைத்த முழுமுயற்சியாளர். தாம் இளங்கலைத் தேர்வில் தமிழில் தோற்ற காலையில் பாண்டித்துரையாரிடம் தனியே தமிழ் பயின்று, அத்தேர்வில் தேறிப் பின்னர் வழக்கறிஞர்க்குப் பயின்று பணி செய்யப்புகுந்த வேளையில், பழைமை மறவாமல் பாண்டித் துரைக்குப் பக்கம் நின்று சங்கத்திற்குத் தம்மை ஒப்படைத்துப் பணிசெய்தவர்.
தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டும்போது கடனாகவும். நன்கொடையாகவும் பொருள் வழங்கியுள்ளார். தமிழ்ச்சங்கக் கல்லூரி மாணவர்களுக்கு 1914 முதல் 1950 முடிய 36 ஆண்டுகள் தீபாவளிக்கு உடை வாங்கித்தர உதவியுள்ளார். சங்கக் கல்லூரி மாணவருள் ஒருவர்க்குத் தம் பொறுப்பில் உண்டி உடை உறையுளுக்கு வேண்டும் பொருளுதவி செய்தார். பாண்டியன் புத்தகசாலைக்கு 1123 புத்தகங்களையும், தாம் தொகுத்து வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளையும் வழங்கினார்.
சங்கத்தின் தொடக்க நாள் முதல் 50 ஆண்டுகளின் வரலாற்றில் பங்கு கொண்ட அப்பெருமகனார் மறைவு சங்கத்தை அசைத்தது; ஆட்டியது. அப்பொழுதில் சங்கத்தை நிலைபெறுத்த முன்னின்றவர் திரு.பி.டி. இராசன் ஆவர்.
வர் காலத்தில் சங்கம் பொன்விழாக் கண்டது. அதனைச் சிறப்பாக நடாத்தியதும், சங்கச் சார்பில் செந்தமிழ்க்