உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

ஏழாம் நாள், இலங்கை காந்தையா வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் சென்னை, பொதுப் பணித்துறை யமைச்சரும் தமிழ்ச் சங்கத் தலைவருமான சண்முகராசேசுவர சேதுபதி பரிசு வழங்கினார். புலவர்கள் எழுவர் உரையாற்றினர். இவ்வாறே இசை நாடக நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

மா.

பொன் விழாக்குழுத் தலைவராகப் பி.டி. இராசன் அவர்களும், துணைத் தலைவர்களாக அ. சிதம்பர முதலியார், என்.ஆர்.கிருட்டிணசாமி ஐயங்கார், பி. ரெங்கசாமி நாயுடு, பேராசிரியர் ஆ. கார்மேகக்கோனார், டாக்டர் இராசமாணிக்கனார் ஆகியோரும், வி. சண்முகசுந்தரம் கி. பழனியப்பன் ஆகியோர் செயலாளர்களாகவும், மு. சுப்பிரமணிய முதலியார், ஏ.பி. முகமது சுல்தான் ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும், வி. அழகப்பன் பொருளாள் ராகவும், ஏசு. பார்த்தசாரதி நாயுடு, பி. இராமசாமி ராசு,ஏ. ரெங்கசாமி ஐயங்கார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, எம். சிவசுப்பிரமணிய பிள்ளை நா. பாலுசாமி ஆகியோர் விழாக்குழு உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

பொன்விழாவை ஒட்டி ஓர் அரிய மலர் வெளியீடும் இருந்தது மிகச்சிறந்த அம்மலர் பொன்விழாவில் உரையாற்றிய பெருமக்கள், தாம் உரையாற்றப் போகும் பொருள் பற்றி முன்னரே எழுதித் தந்து அச்சிடப் பெற்ற அருமையுடையதாகும் முன்னுரையுடன் 56 கட்டுரைகளைத் தாங்கியுள்ளது அம்மலர்.

"இச்சங்கம் நாலாவது சங்கமாகும். இதற்கு முன்பிருந்த மூன்று சங்கங்களில் முதல் இரண்டு சங்கங்கள் கடலில் மறைந்தன. மூன்றாவது சங்கம் கி.பி. ரண்டாவது நூற்றாண்டோடு மறைந்தது. வரலாற்றை ஒட்டிய பலகாரணங் களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் வளர்ச்சிக்கான உணர்ச்சியும் முயற்சியும் மக்களிடையே தோன்றாமல் போய் விட்டன. உயர்திரு பாண்டித்துரைத் தேவர் அவர்களின் முயற்சியால் நாலாவது சங்கம் - நிலையான சங்கம் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி மதுரையில் தமிழ் நாட்டிலுள்ள புலவர் பெருமக்கள் திரளாகக் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் துவக்கப்பெற்றது. அவரது இறுதிக் காலமாகிய 1911 ஆம் ஆண்டுவரை இச்சங்கத்தை வளர்ப்பதற்காகப் பாண்டித்துரைத் தேவரவர்கள் உடல் பொருள் ஆவிமூன்றையும் காணிக்கையாக்கினார். அவர்