உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இணைப்பு மண்டபம்

பொன் : அட்ட சத்தி மண்டபத்திற்கும் அடுத்துள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கும் இணைப்பாக அமைந்தது

கண்

ம்.

இம்மண்டபம். இம் மண்டபம் தீமைக்கும் - நன்மைக்கும், மறத்திற்கும் அறத்திற்கும், மருளுக்கும் - அருளுக்கும் இணைப்பு மண்டபமாக உள்ளது.

இங்கே எதிரெதிராக இரண்டு சிலைகளே உள்ளன. எனினும் இ வை காண்பவர் உள்ளத்தைக் கவ்விப் பிடிப்பனவாக அமைந்துள்ளன.

பொன் : வடபால் நிற்கும் இவ்வேடனைப் பார்!.

விம்மி

எழுந்து வீறிக் கிடக்கும் அழகிய இவன் மார்பைப் பார்! அதே பொழுதில் அருளே அருவியாக வழியும் திருவிழிகளையும் பார்! தோற்றத்தின் வீறுக்குத் தக்க வெம்மையை வரப்பண்ணாமல் தண்ணருள் பெருகச் செய்துள்ளானே கலைஞன்! அவன் கைத்திறனைப் பார்! விரிந்த மார்புக்கு ஒடுங்கிய இடை அழகா? ஒடுங்கிய இடைக்கு விரிந்த மார்பு அழகா? ஒன்றற்கு ஒன்று அழகாக அமையும்போது ஒன்றைக் குறித்துக் கூறமுடியுமா?

திருக்கி விட்டு முறுக்கேறித் திரண்டு தொங்கும் மீசையைப் பார்! ஓட்டம் பிடித்தற்கு ஏற்றவாறு உடலைக் குறுக்கி அடியெடுத்து வைக்கும் ஒய்யார நடை அழகைப் பார்; சரியாக நேரே பாராமல் ஒருபால் சாய்த்த பார்வையைப் பார்! இவன் அருகில் பறவையும், குரங்கும் வலையும் இல்லையெனின், வேடன் என்று சொல்லவும் முடியுமோ? களை சொட்டும் இக்கலைப் படைப்பைக் கண்டதும் காட்டுவேடன் நம் கருத்தை விட்டு மறைந்து போகிறானே!

இந்த வேடனுக்கு எதிரே நிற்கிறாளே தென்பக்கம், இவளென்ன வேட்டுவச்சியா! தன் காதலன் அழகிலே