உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

289

வாய்ப்பின்றித் தடுக்கப்பெற்றது. கல்லூரிப் பேராசிரியன்மார்க்குச் சம்பளம் வழங்கமுட்டுப்பாடு உண்டாயிற்று. ஒருதிங்கள் இருதிங்கள் முட்டுப்பாடா? ஏழாண்டுகள் சங்கப் பணத்தில் இருந்து சம்பளம் வழங்க இயலாத முட்டுப்பாடு! ஆயினும் பாக்கியின்றித் திங்கள் தோறும் சங்கம் சம்பளம் அளித்தது. சங்கக் கல்லூரிக்கு அதுகாறும் வற்புறுத்தப் பெறாமல் இருந்த வைப்புத் தொகை கட்டாயம் வைத்தே ஆகவேண்டும் என்னும் நெருக்கடியும் பல்கலைக்கழக வழி வந்தது. ஓர் இலக்க ரூபா அதற்கெனத் திரட்டித்தரப் புதுச்சங்கச் செயற்குழு முனைந்தது. அம் முயற்சி முழுதளவில் பயன் பெற்றமையால் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்தன.

இப் புதுச்செயற்குழு ஒரு புதிய திட்டத்தைக் கொணர்ந்தது. இந்நாள், அஞ்சல் வழிப்பாடத்தைப் பல்கலைக் கழகம் தோற்று வித்து நடத்துதலுக்கு முன்னோடியாகத் தமிழ்ச்சங்கம், தமிழ்ப் புலவர் தேர்வுக்கு அஞ்சல் வழிப்பாடத்தைத் தொடங்கியது, ஆங்காங்குள்ள புலவர் தனிப்பயிற்சிக் கல்லூரிகளையும் சங்கத் தொடு இணைத்துக் கொள்ளும் வழிமுறையையும் உண்டாக்கியது. தேர்வுக்குழுத் தலைவராக டாக்டர் சி.இலக்குவனார் அமர்ந்து சீரிய பணிசெய்தார்.

பாண்டித்துரைத்தேவர் பைந்தமிழ்ப் பேரவை என ஒரு பேரவை 26-8-73 சங்கச் சார்பில் தொடங்கப் பெற்றது, அதன் வழியே ஆய்வுக் கருத்தரங்குகள் நடாத்துதல் விழாவெடுத்தல். தகுதிவாய்ந்த சான்றோர்களின் பணிநலம் பாராட்டிப் பட்ட மளித்ததல் என்பவை நடைபெற்று வருகின்றன.

31-8-1969 இல் பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர் நூற்றாண்டுவிழாக் கொண்டாடப் பெற்றது. அவ்விழாவின் சார்பில் சிறப்பான மலர் ஒன்றும் வெளியிடப் பெற்றது. விழாக்குழுச் செயலாளராக ஆ. ஆண்டியப்பன் பணியாற்றினார். தலைவரும் துணைத்தலைவருமாக க. பெரியகருப்பன் அம்பலம் அவர்களும்,மா. தனுக்கோடி பாண்டியன் அவர்களும் கடமை புரிந்தனர்.

பாண்டித்துரைத் தேவரின் 105 ஆம் ஆண்டு நிறைவு விழா 6-1-73, 7-1-73 ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. 6-1-73 ஆம் நாள் விழாத் தலைமையை ஆர். செல்லத்தேவர் ஏற்றார். மாநிலக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் மெ. சுந்தரம் விழாவைத் தொடங்கி வைத்தார். பண்டித மு. கந்தசாமிப் புலவர் சிறப்புரையாற்றினார்.