உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒருமாமணி

"வேண்டத் தக்க தறிவோய்நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ" என்பது மணிமொழியார் திருமொழி(திருவா. குழைத்த.6) "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்பது அப்பரடிகள் அருள்மொழி. (6:23.1) உலகியல் மேம்பாட்டுக்கு உரிய வாய்ப்புக்களை இயற்கையும் சூழலும் உரிய பொழுதில் தந்து கொண்டே இருக்கின்றன.

"இன்னகேடுகள் மல்கியிருக்கின்றனவே; இன்ன இன்ன நலங்கள் உண்டாக வேண்டுமே, என்று நல்லவர்கள் உள்ளம் நைந்து உருகும் போது, தக்க தலைவர்கள் தோன்றித் தகவுடைய பணிகள் செய்கின்றார்கள். வழிகாட்டுகிறார்கள்; தக்க அமைப்புகளும் அவர்களால் தோற்ற முற்றுப் பணி செய்கின்றன, காந்தத்தால் இழுக்கப்படும் இரும்பென உணர்வுடைய மக்களும் அவர்கள் குரலுக்குச் செவி சாய்த்துச் செல்கின்றனர்; கோழைகளும் வீரர்களாய், இளையரும் பேராற்றாய்த் தொண்டில் ஈடுபட்டுத் துலங்குகின்றனர். மங்கியதோர் இருளில் தங்கிய மடியர்களாய்க் கிடந்தவர்களும், கிளர்ச்சி மீக்கூர்ந்து தக்க தலைமைக்குப் பின்னே மிக்க உரத்தோடு நடையிடுகின்றனர். இத்தகு நிலையில் இத்தகு சூழலில் தோன்றிய தோன்றலே பொன் பாண்டித் துரையார் ஆவர்.

-

உயர்தனிச் செம்மொழியாயும், உலக முதன் மொழியாயும் இலங்கும் தமிழ்மொழியின் சிறப்பைத் தமிழர் தாமும் அறியாராய் ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்ந்து கொண்டிருந்த நிலையிலே தான் பாண்டித்துரையார் தோன்றினார். தமிழ்த் தொண்டில் தலைப்பட்டு நின்ற சேதுபதிகள் மரபிலே பிறந்தார்; பொன்னுச்சாமித் தேவர் புலமைத் திறமெல்லாம் ஓர் உருக் கொண்டு பாண்டித்துரையாய் வந்தாற் போல விளங்கினார். பிறந்த குடியும், வளர்ந்த சூழலும், வாய்த்த திறமும் அவர்க்குத் தமிழூற்றத்தைத் தந்தன. இயல்பிலேயே அவர்க்கு அமைந்திருந்த ஆளுமைவீறு, தலைமைச் சீர்மையைத் தக்காங்கு உதவியது. நாட்டுத் தொண்டில் பங்குகொண்ட