உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

303

களுள். குறிப்பிடத்தக்கவர்கள் வ.உ. சிதம்பரனார். வ.வே.சு. ஐயர், திரு.வி.க. முதலியோர். பாரதியார் மொழித்தொண்டின் வழியே நாட்டுத் தொண்டில் நிலைத்தவர் ஆவர். இவர்கள் வழி ஈதாக, நாட்டுப்பற்றையும் மொழிப் பற்றையும் சீரிய நிலையில் ணைத்துத் தனித்தனியே சிதறிப் போகாமல் ஒர் அமைப்பாக ஆக்கி வளர்த்துப் போற்றிக் காத்த புகழாளர் பாண்டித்துரையே ஆவர். ஆகலின், அவர்தம் விரிந்த எதிர்கால வளமிக்க பார்வை எவரினும் உயர்ந்து செல்வதாயிற்று. இன்ன பிறவற்றை யெல்லாம் எண்ணுங்கால் 'பொன்' தந்த பாண்டி மணிகளுள் மணியாய் ஒருமா மணியாய் ஓங்கிய திருமாமணி என்பது தகும்.