உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மீனாட்சி நாயக்கர் மண்டபம்

.

பொன் : இம் மண்டபம் மீனாட்சி நாயக்கர் என்பவரால் கட்டப்பெற்றது. இவர் விசயரெங்க சொக்கநாத நாயக்கர் தலைமை அலுவலர்களுள் (பிரதானி களுள்) ஒருவர். இவர் பெயர் 'அம்மை' பெயரென்பது வெளிப்படை. இப்பெயரை ஆண் பெயராக்க விரும்புவார் 'மீனாட்சி சுந்தரர்' என்பாரே அன்றி 'மீனாட்சி' என்றே இடார். இவர் பெற்றோர் இவ்வம்மை பால் கொண்டிருந்த பேரன்பால் 'பால்' நிலையும் கருதாமல் பெயர் சூட்டியுள்ளனர். இத்தகைய பெயராளர் அம்மை திருமுன்னர்ப் பெருமண்டபம் எடுப்பித்தது இயல்பேயாம்.

கண்

கி.பி. 1707 இல் எடுக்கப் பெற்றது இம் மண்டபம். இதன் நீளம் 48 மீட்டர்; அகலம் 33 மீட்டர். மேலே யாளி உருவமும் கீழே சிறுசிறு சிற்ப வேலைப் பாடுகளும் அமைந்த 110 தூண்கள் இம் மண்டபத்தில் உள்ளன. தூண்களின் உயரம் 6.6 மீட்டர். மிக விரிவான இம் மண்டபத்தில் மிகுதியான சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. எனினும் திரளான மக்களைத் தன்னிடத்துக் கொண்டு பெருவிழாக் கோலம் கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது. முன்னாளில் கோயில் யானைகளும் காளை களும் ஒட்டகங்களும் கட்டப்பெற்றிருந்த இவ்விடத்தின் வடபக்கம் இப்பொழுது பூக்கடைகளும், தென்பக்கம் வளையல், பொம்மை முதலியவை விற்கும் கடைகளும் உள்ளன.

விரிவான இம் மண்டபத்திற்கு இதன் விரிவே தனிப் பேரழகாக அமைந்துள்ளது. விரிந்த இடத்தில் இருக்கும் போது தான் மாந்தருக்கும் விரிந்த பார்வை ஏற்படும் போலும்! உயரத்தில் உயரமான மலையில் ஏறிச் செல்லும் போது உள்ளமும் எவ்வளவு உயர்ந்து செல்கின்றது!