இணைப்பு - 2
பாற்கர சேதுபதி அவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்
குறிப்பு : சேதுபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நாட் குறிப்பினின்றும் எடுக்கப் பெற்றது.
1.
2.
3.
ராமேசுவரம்)
(தங்கல் :- இரா
1893 சனவரி 13:- வாழ்க்கையில் என் குறிக்கோள்கள். கீழ்க்கண்டவைகளைச் செய்து முடிக்க வேண்டும்:-
தங்கக் கோபுரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மணிக்கூண்டு,சுற்றியுள்ள மண்டபம்,, மூலத்தானத்தில் சந்தனப் பலகைகள் அமைத்தல், கருங்கல் பீடத்திற்கு வெள்ளிக் கவசம் செய்தல், படிக்கட்டுகளுக்கு வெள்ளிக் கவசம், சந்தனக் கட்டையினால் கதவுகள், வெள்ளிச் சரவிளக்கு மணிகள், இரத்தினக் கவசம், முத்துக்கிரீடம், நாள் திட்டத்திற்கும், நவராத்திரித் திட்டங்களுக்குமாகக் கிராமங்களை அறக்கட்டளை யாகத் தருதல், சிங்க வாகனமும், சிம்மாசன வாகனமும் செய்தல், இராசேசுவரி மண்டபத் திருப்பணி செய்தல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்.
சக்தி தந்திரம் கற்றுப் பயிற்சி செய்ய வேண்டும்.
செப்பனிட்டு,
ராமேசுவரம் கோயிலைப் பொறுப்பேற்று நான்கு திருமதில்களையும் மேலைக் கோபுரத்தைப் பழுதுபார்த்துப் பெரிய திருச்சுற்று வெளிக்குத் தளவரிசை போட வேண்டும்.சுவாமிக்கும், அம்மனுக்கும் தங்க விமானங்கள் அமைக்க வேண்டும். எல்லா வாகனங்களையும் வெள்ளியினாற் செய்து, கும்பாபிடேகமும் செய்ய வேண்டும்.