உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

31

பொன்: ஆம்! சங்கப் புலவர்கள் 49 பேர்களே! அவர்களுக் கென்றே இக் கோயிலுக்குள் ஒரு கோயில் உள்ளது. அதில் 49 பேர்களின் சிலைகளும் உண்டு. அதனைப் பிறகு பார்க்கலாம். இப்பொழுது கீழ்ப்பக்க மண்டபத்து வழியே செல்வோம். கண்ணப்பா, இந்த மைய இடத்தில் நின்று பார்! எத்தனை கோபுரங்கள் தெரி கின்றன?

கண்

எட்டுக் கோபுரங்கள் தெரிகின்றன; இரண்டு தங்க விமானங்கள் பளிச்சிடுகின்றன. என்ன அழகான காட்சி!

பொன் : கோபுரங்களைப் பற்றிப் பிறகு பேசிக்கொள்வோம். விமானங்களில், தெற்கே தோன்றுவது அம்மையின் திருக்கோயில் கருவறை விமானம். வடக்கே தோன்றுவது சொக்கர் கோயில் கருவறை விமானம்.

கண் :

றையன்பு மிக்க அடியார்கள் தங்கள் மனைவி மக்களுக்குத் தங்கத்தைப் பூட்டி அழகு பார்ப்பதைப் பார்க்கிலும், இறைவனுக்குச் செய்யும் திருப்பணிக்குச் செலவிட்டு அழகு பார்ப்பதையே விரும்பியுள்ளனர். தங்களுக்குத் 'தங்கக் குடிசை' இல்லாவிட்டாலும் இறைவனுக்குத் 'தங்கக் கோபுரம்' எழுப்புவதிலேயே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வளர்ந்த வகை அது. “பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டி னோடிரண் டும்மறி யேனையே”

என்ற மாணிக்கவாசகர் வாக்கைச் சொல்லி உன்னைப் பாராட்ட வேண்டியுள்ளது. “அறிவால் சிவனே" என்ற பெருமைக்குரிய அப் பெருமகனாரோடும் ஒப்பிட்டுக் கூற நாணுதல் ஏற்படுவது உண்மைதான். இருந்தாலும் இவ்விடத்தில் என்னை நிறுத்தி, 'எட்டும் இரண்டும்' காட்டிய இன்பக் காட்சி இப்படிக் கூறவைக்கின்றது. பொன் : கண்ணப்பா, 'எட்டு' 'இரண்டு', என்பன இக் கோபுர எண்ணிக்கையைக் கொண்டு கூறவில்லை என்பது விளங்குகின்றது. அதன் உட்பொருளைக் கூறுகின்றாயா? ரண்டு என்பது

கண்

எட்டு என்பது தமிழில் 'அ', 'உ' இவற்றுடன் 'ம்' சேரின் 'ஓம்' என்பதாம் 'ஓம்' என்னும் மந்திரப் பொருள் அறியாதவன் என்பது ஒரு பொருள்.எட்டும் இரண்டும் ஆகிய பத்து என்பது