உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கிளிக் கூட்டு மண்டபம்

பொன் : இது கிளிக் கூட்டு மண்டபம்; அம்மையைப் பசுங் கிளியாக வருணிப்பர். பறவைகளில் 'பிள்ளை' என்று பெருமையாக அழைக்கப்படுவது இக் கிள்ளையே. இதன் மழலை மொழிகேட்டு மகிழார் உளரோ? கண்ணுக்கு இன்பமும் காதுக்கு இன்பமும் தரும் இதன் அருமையிலே விளைந்தது தானே 'கிள்ளை விடு தூது!

கண்

கிளியைக் கையில் ஏந்திய கிளி அங்கயற் கண்ணி, அவள் அருள் பொழியும் திருவடிவிலேயே கிளிக்குத் தனியிடம் உள்ளதை நினைத்துக் கோயிலிலும் இடந் தந்துள்ளனர். அம்மை அருமைக் கிளிக்குச் சிறையோ தந்தாள்? பறக்கச் சிறை (சிறகு) அல்லவா தந்தாள்? அப் பைங்கிளிக்கு. இவ்வாறு பச்சைக் கிளிகளைக் கூட்டுள் அடைத்து வைத்தல் உவப்பாகாது என்றாலும், பேரன்பர் ஒருவர் உள்ளத்தே இப்படி ஓர் ஆர்வம் எழும்பியிருக்கின்றது! அன்பு வெள்ளமாய்ப் பெருக் கெடுத்தால் சிலவேளைகளில் அருள் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளும் போலும்!

பொன் : மேலே பார்! எத்தனை வண்ண ஓவியங்கள்! பிள்ளையார் முருகன் அம்மை திருவடிவங்கள் எத்தனை எத்தனை! "ஓர் உருவம் ஒரு நாமம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம், திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்பதை நினை வூட்டும் உயிரோவியங்கள், இவற்றையும் மண்டப முகப்புத் தட்டுகளில் உள்ள திருவிளையாடல் சிற்பங்களையும் தனித் தனியே பேசினால் திருவிளை யாடல் புராணம், பெரிய புராணம் முதலிய நூல்களை யெல்லாம் முழுமையாகப் பேச நேரும்.நமக்குப் பொழுது இல்லை. நாம் ஒரு பார்வை தானே பார்க்கின்றோம்! நுணுக்கமாக என்றால் அட்டசத்தி மண்பத்தை இன்று கடந்திருப்போமா?