உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

43

முன்னவன் உலகியலைச் சிந்திக்கின்றான் போலும்! பின்னவன் மெய்ப் பொருளைச் சிந்திக்கின்றான் போலும். பாண்டவருள் தருமனுக்கு இளையவன் வீமன் அல்லனோ!! அவனைக் காணவில்லையே! அவன் மட்டும் விடுபெற்றது ஏன்?

பொன் : அவன் விடுபெறவில்லை. அவனைப் பார். அம்மை திருவாயில் முன்னே உள்ள பலி பீடத்தின் அருகில் நிற்கின்றான். தண்டேந்திய தனிவீரனாகத் தோற்ற மளிக்கின்றான் அல்லவா!

கண்

பலி பீடத்திற்குத் தெற்கே வீமன் நிற்கின்றான். அதற்கு வடக்கே மனிதவிலங்கு (புருஷா மிருகம்) நிற்கிறது. அதுவும் தண்டேந்திக் கொண்டு வீமனுக்கு இணையாக நிற்கின்றது.

பொன் : இதுதான் 'தரும சங்கடம்'

கண் : 'தரும சங்கடமா?”

பொன் : இதையும் செய்ய முடியாமல் எதையும் செய்ய முடியாமல் இடர்ப்படும்போது 'தருமசங்கடமாக இருக்கின்றது' என்பார்களே! அந்தத் தருமசங்கடம் தான் இது.

கண்

துரியோதனன் வேண்டுதல் படி வீமன் மனித விலங்கின் பால் கொண்டு வருவதற்காகக் காட்டுக்குப் போய், மனித விலங்கின் குட்டியைத் தாக்கிக் கொல்ல வந்த கரடியிடமிருந்து குட்டியைக் காத்து, மனித விலங்கின் பாலைக் கொண்டு வந்தானே அந்தக் கதைதானே?

பொன் : ஆம். மனித விலங்கு; 'என் காட்டுள் மனிதன் வருதல் கூடாது.நீ வந்துவிட்டாய். ஆனால் நீ செய்த உதவிக்கு உன்னை மன்னித்துப் பாலும் தந்தேன்; நீ பொழுது விழுவதற்குள் இக் காட்டின் எல்லையைத் தாண்டிவிடுதல் வேண்டும், அப்படித் தாண்டத் தவறினால் உன்னைக் கொன்று விடுவேன்' என்னும் உறுதிமொழியுடன் வீமனை விடுத்தது. பொழுது விழும்போது வீமனின் ஒரு கால் காட்டைத் தாண்டி விட்டது; மற்றொரு கால் காட்டுள் இருந்தது. மனித விலங்கு உன்னை விடமாட்டேன் என்று காட்டுள்